For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதையெல்லாம் பார்க்கும் போது நமக்கு ஆத்திரங்கள் வருது மக்களே!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலில் விற்கப்படும் விசேஷ பேனா மூலம் தேர்வு எழுதினால் 100 சதவீத தேர்ச்சி நிச்சயம் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள அனுமன் கோயிலில் பூஜிக்கப்பட்ட விசேஷ பேனா மூலம் தேர்வு எழுதினால் வெற்றி நிச்சயம் என்று சமூகவலை தளங்களில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.

குஜராத் மாநிலம், பஞ்சமஹால் மாவட்டத்தில், கஸ்தாபஞ்சன் என்ற கோயில் உள்ளது. அக்கோயிலின் அனுமன் பக்தரான பாபுஜி என்பவர் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்.

 A temple in Gujarat offers 100% success in exams by using Magic Pen

அதில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டுமா எங்கள் கோயிலில் சரஸ்வதி- அனுமன் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட மேஜிக் பேனாவை வாங்கிக் கொடுங்கள். 8-ஆம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை இந்த பேனாவை மாணவர்கள் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெறலாம்.

அதன் விலை ரூ.1900 மட்டுமே. ஒரு வேளை இந்த பேனாவை பயன்படுத்தியும் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை எனில் பேனாவுக்காக செலுத்திய பணத்தை திருப்பி அளிப்போம்.

பேனாக்களை வாங்க வரும் மாணவர்கள் தேர்வு கூட அனுமதிச் சீட்டு நகல், பள்ளி அடையாள அட்டை நகல், செல்போன் எண் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கஸ்தாபஞ்சன் கோயிலுக்கு மாணவர்கள், பெற்றோர் கூட்டம் அதிகரித்து வருகிறது.

பெற்றோர்களை குறிவைத்து அனுப்பப்படும் இந்த விளம்பரங்கள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், மக்கள் இந்த பேனாவை ரூ.1900 கொடுத்து வாங்கிச் செல்வதை பார்த்தால் தேர்வுகளில் தேர்ச்சி பெற படிப்பதைக் காட்டிலும் தெய்வீக சக்தி மிகவும் முக்கியமானது போல் உள்ளது.

இதையெல்லாம் பார்க்கும் போது நமக்கு ஆத்திரங்கள் வருது மக்களே!

English summary
The Kashthabhanjan Temple located in Gujarat’s Panchmahal district claims that using the ‘magical pen’ can help the students achieve success in their exams.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X