For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கன்னியாகுமரி அருகே தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 20 பேர் படுகாயம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே மார்த்தாண்டத்தில் தேவாலயத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளர்கள் 20 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. வடதமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையினால் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்து குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை ஆரம்பத்தில் பெய்த அளவை விட கொஞ்சம் குறைவான அளவிலேயே பெய்து வருகிறது. குறிப்பாக தற்போது தென் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது.

temple wall collapsed in near kanniyakumari

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ளது சாமியார் மடம். இங்கு தேவாலயம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. தற்சமயம் தேவாலயத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனிடையே இந்த தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் கட்டட புனரமைப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதையடுத்து காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

English summary
kanniyakumari near church wall collapsed 20 person injured
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X