For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு சில நிமிடங்களில் 10 பேர் தோல் கழிவுநீரில் மூழ்கிய பரிதாபம்.. உயிர் தப்பியவரின் அதிர்ச்சி தகவல்!

By Mathi
Google Oneindia Tamil News

வேலூர்: ராணிப்பேட்டை சிப்காட்டில் தோல் கழிவுநீர் தொட்டி உடைந்த ஒரு சில நிமிடங்களிலேயே 10 பேர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக உயிர் தப்பிய ரவி கூறியுள்ளார்.

ராணிப்பேட்டை சிப்காட்டில் தோல் கழிவுநீரில் மூழ்கி 10 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் உயிர் தப்பிய ரவி இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவராக இருக்கிறார்.

Ten killed in wall collapse in Tamil Nadu

கழிவுநீர் தொட்டி உடைந்த விபத்தில் இருந்து தப்பியது குறித்து ரவி கூறியதாவது:

நள்ளிரவு 12.30 மணியளவில் டேங்க் உடைந்த சத்தம் கேட்டு கண் விழித்து சுதாரித்த நான் அங்கிருந்த சுவரில் ஏறி நின்று விட்டேன்.

இதனால் என்னால் தப்பிக்க முடிந்தது. துர் நாற்றத்துடன் விஷவாயு பரவியது. நான் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டேன்.

மற்ற தொழிலாளர்களை காப்பாற்ற சத்தம் போட்டேன். ஒரு சில நிமிடங்களில் கழிவுநீர் தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்களை மூழ்கடித்து விட்டது.

இன்னும் அந்த பதற்றம் என்னை விட்டு அகலவில்லை. இதுபோன்ற விபத்துகள் இனிமேல் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ரவி கூறினார்.

மறியல்

இதனிடையே இந்த சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ராணிப்பேட்டை காவல்நிலையம் முன்பாக இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Ten factory workers were killed after a wall of an industrial plant collapsed on them at Vaniyambadi in Vellore district in Tamil Nadu's Vellore district on Saturday.

English summary
Ten people were, reportedly, killed Vellore district of Tamil Nadu after a wall collapsed in an industrial plant on Wednesday. The victims are reported to be the workers at the factory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X