For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிர வைத்த தென்காசி விவசாயி மரணம்.. உடம்பில் 4 இடங்களில் காயங்கள்.. போஸ்ட் மார்ட்டத்தில் ஷாக் தகவல்

தென்காசி விவசாயி உடம்பில் 4 இடங்களில் காயம் உள்ளதாக ரிப்போர்ட் வந்துள்ளது

Google Oneindia Tamil News

தென்காசி: நடுராத்திரி விசாரணைக்கு கூட்டிட்டு போனதுமே, தென்காசி விவசாயிக்கு நெஞ்சுவலி வந்துவிட்டதாகவும், அதனால் அப்போதே அவர் இறந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.. ஆனால் இப்போது அவரது உடம்பில் 4 இடத்தில் காயங்கள் இருக்கிறதாம்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துள்ளது!

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ளது வாகைக்குளம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் அணைக்கரைமுத்து.. இவர் ஒரு விவசாயி.. 65 வயசாகிறது.. சொந்தமாக நிலம், தோட்டம் வைத்திருக்கிறார்.. அந்த தோட்டத்தில் காய்கறிகளை பயிரிட்டிருந்தார்.

ஆனால் காட்டு பன்றிகள் தோட்டத்துக்குள் நுழைந்து இவரது பயிர்களை நாசம் செய்து விடுவதால், நிலத்தை சுற்றி மின்வேலி போட்டிருந்தார்... இந்த மின்வேலியை அவர் வனத்துறையினர் அனுமதி இல்லாமல் போட்டுவிட்டதாக புகார் போயுள்ளது.

ஒத்த அறிவிப்பில் திண்டுக்கல் அதிமுகவே தலைகீழாக மாறிடுச்சே.. மீண்டும் தலைதூக்கிய 'நத்தம்' கோஷ்டிஒத்த அறிவிப்பில் திண்டுக்கல் அதிமுகவே தலைகீழாக மாறிடுச்சே.. மீண்டும் தலைதூக்கிய 'நத்தம்' கோஷ்டி

விசாரணை

விசாரணை

மேலும் இலவச மின்சாரத்தை தோட்டத்துக்கு பயன்படுத்தி கொண்டதாகவும் இவர்மீது புகார் எழுந்தது.. இதையெல்லாம் விசாரிப்பதற்காக கடந்த 22-ம் தேதி இரவு 11.மணி அளவில் வனத்துறையினர் வந்து, அணைக்கரைமுத்துவை ஜீப்பில் ஏற்றி கொண்டு, கடையத்தில் உள்ள வனத்துறை ஆபீசுக்கு சென்றுள்ளனர். அங்குதான் நள்ளிரவில் விசாரணை நடந்துள்ளது.

 நெஞ்சுவலி

நெஞ்சுவலி

ஆனால் அங்கு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அப்போதே இறந்தும் விட்டதாக சொல்லப்பட்டது.. இதனால் உறவினர்களும், ஊர்க்காரர்களும் கொந்தளித்து விட்டனர்.. அவர் உடம்பில் காயங்கள் இருந்தது.. நாங்க பார்த்தோம், வனத்துறையினர் தான் அடித்து கொன்றுவிட்டனர் என்று சொல்லி அப்போதே மறியலும் செய்தனர். இதையடுத்து, வனத்துறையினர் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சடலம்

சடலம்

மேலும், அம்பாசமுத்திரம் மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் விசாரணை நடத்தி, அந்த அணைக்கரைமுத்து உடலில் இருந்த காயங்களையும் பார்வையிட்டார்... பிறகு சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பப்பட்டது.. இதனிடையே, இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அணைக்கரைமுத்து மனைவி பாலம்மாள் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.. செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

அரசு சார்பில் அணைக்கரை முத்துவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்முத்திரையிட்ட கவரில் மூடி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அணைக்கரை முத்துவின் சடலத்தை ஏன், நைட் நேரத்தில் போஸ்ட் மார்ட்டம் செய்யம்? விதிகளை மீறி ஏன் செய்யப்பட்டது என ஜட்ஜ் கேள்வி எழுப்பினார்.. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தடுக்கத்தான் நைட் நேரத்தில் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது என அரசு வக்கீல் அதற்கு பதிலளித்தார்.

 4 இடங்களில் காயம்

4 இடங்களில் காயம்

அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அணைக்கரை முத்துவின் உடம்பில் 4 இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது என நீதிபதி தெரிவித்தார்.. ஆனால் மனுதாரர் வக்கீல்கள், அணைக்கரை முத்துவின் உடம்பில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக அவரது குடும்பத்தினரிடம் அம்பை நீதித்துறை நடுவர் தெரிவித்து ஆவணங்களில் கையெழுத்து பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டது... இதையடுத்து இந்த தீர்ப்புக்கான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

English summary
tenkasi farmer dead issue injury his body 4 places
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X