For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கல்லிடைக்குறிச்சி என்றில்லை... தென்காசின்னாலே பரோட்டாதான்.. நாள் பூராம் சாப்பிட்டுட்டே இருக்கலாம்லா!

Google Oneindia Tamil News

தென்காசி: கல்லிடைக்குறிச்சியில் பரோட்டா போட்டி வைத்திருப்பதில் ஆச்சரியம் இல்லைதான். காரணம், அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமானது அப்பளம், வடகத்திற்கு அடுத்து பரோட்டாதான்.

கல்லிடைக்குறிச்சியைச் சுற்றிலும் உள்ள தென்காசி, செங்கோட்டை பகுதியில் பரோட்டா தான் மிகப் பிரபலம். எப்போது போனாலும் பரோட்டாவுக்கு அங்கு பஞ்சமே இருக்காது.

அருமையான பரோட்டா சாப்பிட வேண்டும் என்றால் தென்காசிக்குப் போய் விட வேண்டும். அதுவும் பிரானூர் பார்டர் கடை பரோட்டாவை மறக்க முடியுமா? அந்த அளவுக்கு அங்கு பரோட்டா மிகப் புகழ் பெற்றதாக, பிரபலமாக உள்ள ஒரு உணவு வகையாகும்.

பரோட்டா ஸ்பெஷல்...

பரோட்டா ஸ்பெஷல்...

தென்காசி தொடங்கி வரிசையாக பல பரோட்டா கடைகளைப் பார்க்க முடியும். குற்றாலத்தில் குளித்து விட்டு பரோட்டா சாப்பிடாவிட்டால் ஜென்மமே வேஸ்ட் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு பரோட்டாவுக்குப் புகழ் பெற்றது அந்தப் பிராந்தியம்.

பார்டர் கடை...

பார்டர் கடை...

பார்டர் ரஹ்மத் கடை பரோட்டாவுக்கு அப்படி ஒரு ரசிகர் கூட்டம். எப்போது பார்த்தாலும் கூட்டம்தான் அங்கு. பரோட்டாவும் கூட சாப்பிட சிக்கன் வகையறாக்களும், நினைத்தாலே இனிக்கும் பாஸ்!

விதவிதமாய் பரோட்டா...

விதவிதமாய் பரோட்டா...

வெறும் பரோட்டா, வீச்சு பரோட்டா, கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா என ரகம் ரகமாக அடுக்கி வைத்து வயிற்றை நிரப்பிச் செல்வோர் எக்கச்சக்கம். அதற்குத் துணையாக ஆம்லேட், ஆப்பாயில், விதம் விதமான சிக்கன் ஐட்டங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

சுடச்சுட விற்பனை...

சுடச்சுட விற்பனை...

ஒரு பக்கம் பரோட்டாவை சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மறுபக்கம் அது விற்றுக் கொண்டே இருக்கும். இன்னொரு பக்கம் மக்கள் ஒரு கை பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இப்படி கைக்கும், வாய்க்கும் வேலை கொடுக்கும் ஒரே இடம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

ரசிகர் கூட்டம்...

ரசிகர் கூட்டம்...

தமிழகத்தின் பிற பகுதிகளிலும்தான் பரோட்டா கிடைக்கிறது. அதிலும் மதுரை கொத்து பரோட்டா ரொம்ப பேமஸ்தான். இருந்தாலும் செங்கோட்டை, குற்றாலம், தென்காசி பகுதிகளில் விற்பனையாகும் பரோட்டாவுக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருப்பதை மறுக்க முடியாது பாஸ்!

English summary
Apart from cool climate and waterfalls, the Tenkasi in Nellai district is also famous for parotta.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X