For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்லால் அடித்துக்கொல்லப்பட்ட ரவுடி... அதிமுக பிரமுகர் உள்பட 6 பேர் கைது- வேலூரில் பதற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நட்ட நடு சாலையில் ரவுடியை கல்லால் அடித்துக்கொலை செய்த வழக்கில் வேலூர் அதிமுக பிரமுகரின் மகன்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

நாடு முழுவதும் சனிக்கிழமையன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்க வேலூரில் ரவுடிகளிடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலும் அதனால் ஏற்பட்ட கொலையும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜி.ஜி.ரவி, 54. அ.தி.மு.க. பிரமுகரான ரவியின் தம்பி ரமேசுக்கும், சத்துவாச்சாரியை சேர்ந்த பிரபல ரவுடி மகா என்ற மகாலிங்கத்துக்கும் 32 முன்விரோதம் இருந்தது. இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் ரவிக்கும், மகாவுக்கும் முன்விரோதம் அதிகமானது. தம்பியை கொன்ற மகாவை போட்டுத்தள்ள நேரம் பார்த்து காத்திருந்தார் ரவி.

சிறைக்குப் போன மகா

சிறைக்குப் போன மகா

ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி மகா கைது செய்யப்பட்டு வேலூர் மற்றும் கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தார். கடலூர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த அவர், போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடாமல் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். மகாவிற்கு ரவி மீதான பகையும் வளர்ந்து கொண்டுதான் இருந்தது. ரவியைக் கொல்ல நேரம் பார்த்தார் மகா.

கிருஷ்ண ஜெயந்தியில் மோதல்

கிருஷ்ண ஜெயந்தியில் மோதல்

இந்த நிலையில் வேலூர் காகிதப்பட்டறையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி உறியடி விழாவில் கலந்து கொள்ள ரவி வந்தார். அப்போது ரவுடி மகா மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் காவி வேட்டி கட்டிக்கொண்டு பக்தர்கள் போல் வந்து, மகேஷ் கொலைக்குக் காரணமான ரவியை கத்தியால் தலையில் வெட்டி கொலை செய்ய முயற்சித்தனர். இதில் ரவி படுகாயம் அடைந்தார்.

விரட்டிய கும்பல்

விரட்டிய கும்பல்

அதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்து ரவியுடன் வந்த அவரது மகன்கள், ரவுடி மகாவை விரட்டிக் கொண்டு ஓடினார்கள். மகாவின் கூட்டாளிகள் தப்பி ஓடி விட்டநிலையில் காட்பாடி சாலையில் பேருந்து ஒன்று குறுக்கே வந்ததால், ரவியின் ஆட்களிடம் சிக்கினார் மகா.

சுற்றி வளைத்து கொலை

சுற்றி வளைத்து கொலை

தனியாக தங்களின் கையில் சிக்கிய மகாவை 30 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தது. நடுரோட்டில் தடியாலும், கல்லாலும் தாக்கி, தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொடூரமாக தாக்கி கொலை செய்தனர். ரவுடி மகா அடித்துக்கொலை செய்யப்பட்ட காட்சிகள், ‘வாட்ஸ்-அப்'பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சாலையில் ரத்த ஆறு ஓடும் நிலையில் மகாவை துடிக்க துடிக்க கல்லால் அடித்துக்கொலை செய்யும் காட்சி திரைப்படக்காட்சியை விட மோசமானதாக இருந்தது.

6 பேர் கைது

6 பேர் கைது

இந்த கொலை வழக்கு தொடர்பாக ரவியின் மகன்கள் கோகுல் 24, தமிழ்மணி, 20 மற்றும் உறவினர்கள் கார்த்திக்குமார் 18, ரஞ்சித்குமார் 20, சிலம்பரசன், 28 உள்ளிட்ட 6 பேரை வேலூர் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவங்களால் வேலூரில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

போலீஸ் குவிப்பு

போலீஸ் குவிப்பு

காட்பாடி சாலை, காந்திரோடு, மெயின் பஜார், ஆற்காடு சாலை, தனியார் மருத்துவமனை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஞாயிறன்றும் கடைகளும் அடைக்கப்பட்டன. அந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பழிக்குப் பழி

பழிக்குப் பழி

வேலூரில் பழிக்குப் பழி கொலைகளும், அதனால் ஓடும் ரத்த ஆறுகளும் அதிகரித்து வருகிறது. மகேஷ் கொல்லப்பட்டதற்கு மகாவை கொலை செய்து விட்டனர். மகாவை கொலை செய்தவர்களை பழிவாங்க துடித்துக்கொண்டிருக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். வேலூர் சாலையில் மீண்டும் ஒரு ரத்த ஆறு ஓடும் முன்னர் போலீசார் தடுப்பார்களா?

English summary
AIADMK functionary during Krishna Jayanthi celebrations in Vellore, was murdered by the latter's supporters. As a result, tension prevails in the area and shops have been shut down since Sunday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X