For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோகத்தில் ஒரு ஒற்றுமை.... குண்டுவெடிப்புகளில் சிக்கி உயிரிழக்கும் பெண்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: சமீப காலத்தில் தென்னகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பெண்களே அதிகம் சிக்கியுள்ளனர் என்பது அதிர்ச்சித் தகவலாக உள்ளது.

பெங்களூரு நகரில் நேற்று இரவு சர்ச் சாலையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த பவானி என்ற 37 வயது பெண் பரிதாபமாக பலியானார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாலும், ரத்தம் அதிக அளவில் வெளியேறியதாலும் அவர் உயிரிழந்து போனார். அவரது உறவினர் கார்த்திக் (21) மற்றும் சந்தீப் ஆகிய இருவர் காயமடைந்தனர்.

Terror blasts: Women frequent victims

இந்த நிலையில் கடந்த சில வருடங்களில் தென்னகத்தில் குறிப்பாக கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பெண்களே அதிக பாதிப்படைந்துள்ளனர்.

2008ம் ஆண்டு பெங்களூரு நகரின் மடிவாளா பகுதியில் ஜூலை மாதம் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்தார்.

கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.

இந்த ஆண்டு மே 1ம் தேதி சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்த பெங்களூரு - குவஹாத்தி எக்ஸ்பிரஸில் ரயிலில் குண்டு வெடித்ததில் ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் ஸ்வாதி பலியானார்.

நேற்றைய பெங்களூர் தாக்குதலில் சென்னை பெண் பலியாகியுள்ளார்.

English summary
Women have been victims of the terror strikes in Bengaluru since July 2008. The serial bomb blasts in July 2008 claimed the life of a woman at Madiwala. In April 2013 the bomb blast in Malleswaram, seriously injured two girls, On May 1 this year, P Swathi from the City lost her life in a low intensity blast in Bengaluru-Guwahati train at Chennai Central Station. The IED was reportedly planted in Bengaluru. On Sunday, 38-year-old Bhavani lost her life in a low intensity explosion on Church Street.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X