For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”ராத்திரியில மக்கள் தூங்க வேண்டாமா?”- நள்ளிரவு பிரச்சாரத்திற்கு தா.பா. எதிர்ப்பு

|

சென்னை: தேர்தல் ஆணையம் நள்ளிரவிலும் பிரச்சாரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

இதைப் பற்றி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கருத்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "நள்ளிரவில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையர் அறிவித்திருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவிக்கிறது.

Tha pandiyan statement against night campaign…

தேர்தலில் சட்டத்திற்கு புறம்பான செயல்களை தடுப்போம். பொதுமக்களிடம் இதற்கு விழிப்புணர்வை உருவாக்குவோம் என்று அறிவித்துள்ள தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்த நள்ளிரவு பிரச்சார அனுமதியால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வாக்குக்கு பணம் கொடுப்பவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இது வாய்ப்பாக அமைந்துவிடும்.எனவே, நள்ளிரவிலும் வீடு, வீடாக பிரசாரம் செய்யலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை உடன் ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

English summary
CPI state secretary Tha Pandiyan has said that election commission made a mistake by announcing that the political parties can campaign at nights.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X