For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லை பெரியாறு பிரச்சனையில் அரசியல் செய்கிறது கேரளம்- தம்பிதுரை குற்றச்சாட்டு

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கரூர்: கேரளாவில் அரசியல் கட்சிகளுக்கு இடையே உள்ள போட்டி காரணமாக முல்லைப் பெரியார் அணையை ஒரு பிரச்சனையாக எடுத்து பேசி வருகின்றனர் என்று மக்களவை சபாநாயகர் மு. தம்பிதுரை தெரிவித்தார்.

கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை ஆய்வு மேற்கொண்ட மக்களவை துணை சபாநாயகர் அதிகாரிகளிடம் செவிலியர் மற்றும் மருந்தாளுநர் பாடப்பிரிவு தொடர்பான கட்டடம் குறித்து கேட்டறிந்தார்.

Thambi durai accuses Kerala parties for taking Mullai Periyar dam

பின்னர் கரூர் அடுத்த வீரராக்கியத்தில் பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்களை பெற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.தம்பிதுரை,

கரூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி நிறைவு பெற்று அடுத்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

முதல்வர் எடப்பாடி மீது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு கூறியிருப்பது குறித்து கேட்கிறீர்கள்.

எதிர்கட்சிகள் எப்போதும் ஆளும் கட்சி பற்றி குறை கூறி, குற்றச்சாட்டு வைப்பது வழக்கமான ஒன்றாகும். எதுவாக இருந்தாலும் ஆதாரத்துடன் கூற வேண்டும்.

ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு முதல்வரே பதில் அளித்து விட்டார்.

கேரளாவில் உள்ள இரண்டு கட்சிகளுக்கு இடையே உள்ள போட்டி காரணமாக முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு வேண்டும் என்றே அரசியல் செய்து வருகின்றனர்.

மற்றபடி முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. உச்ச நீதிமன்ற ஆணை குழு அணையை கண்காணித்து வருகின்றனர்.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் தனித்தனியாகத்தான் நடத்த முடியும் என்றார்..

English summary
Thambidurai accuses Kerala Political parties for taking Mullai Periyar Dam as there are differences of opinion among them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X