For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலாதான்... இது தம்பித்துரை!

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பித்துரை அழைப்பு விடுத்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலாதான் என்றும் அவர் கூறியுள்ளா

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பித்துரை அறிக்கை வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். அவர்தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்றும் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவரது உடல் அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Thambidurai calls Sasikala to take the responsibility of AIADMK general secretary!

இதைத்தொடர்ந்து அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதில் ஒரு தரப்பின்ர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவே அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை பொதுச்செயலாளராக ஏற்க எதிர்ப்பு தெரிவித்து போயஸ் இல்லம் முன்பு நேற்று ஒரு தரப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை விடுத்துள்ள அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பித்துரை அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். சசிகலாதான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தையும் அதிமுகவையும் பாதுகாக்க சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் அறிக்கை வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary
Lok Sabha deputy speaker Thambithurai calls sasikala to take the responsibility of the AIADMK general secretary. And he says that sasikala is the political heir of Former Chief Minister Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X