For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

23 கப்பல், 8 விமானங்கள் மீனவர்களைத் தேடுகின்றன.. சொல்கிறார் தம்பித்துரை

:ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க மத்திய அரசு உதவி செய்கிறது. 23 கப்பல்கள், 8 விமானங்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளது என்று லோக்சபா சபாநாயகர் தம்பித்துறை கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: மீனவர்களின் நண்பன் தமிழக அரசு, புயலால் பாதித்த மீனவர் குடும்பங்களை தமிழக அரசு காக்கும் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தம்பித்துரை கூறியுள்ளார்.

மீனவர்களை மீட்கும் பணி நிறுத்தப்படவில்லை , மீட்பு பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் தம்பித்துரை கூறியுள்ளார்.

Thambidurai says 23 ships are in Fishermen search operations

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை தம்பிதுரை சந்தித்து பேசினார். செய்தியாளர்களை சந்தித்த அவர், மாயமான மீனவர்களை தேடும் பணியில் 23 கப்பல்கள், 8 விமானங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கைகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.

மீனவர்களை தேடும் பணிக்கு மத்திய அரசு உதவி மிகவும் தேவை என்றும், மத்திய அரசுடன் இணைந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருவதாகவும் தம்பித்துரை தெரிவித்தார். மீனவர்களை மீட்கும் பணி நிறுத்தப்படவில்லை என்றும், மீட்பு பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.

English summary
Loksabha deputy speaker Thambidurai has said that 23 ships and 3 planes are in Fishermen search operations in Kanyakumari sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X