For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போய் நோட்டாவுடன் போட்டி போடுங்க.. பாஜக, காங். குறித்து தம்பித்துரை செம நக்கல்ஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக, காங்கிரசை விளாசிய துணை சபாநாயகர் தம்பிதுரை- வீடியோ

    கரூர்: பாஜக,காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகள் நோட்டாவுடன்தான் போட்டியிட முடியும் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை நக்கலடித்துள்ளார்.

    கரூரில் எம்ஜிஆர் 101வது பிறந்த நாள் விழாவையொட்டி பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஆட்டம், பாட்டத்துடன் கூடிய பொதுக்கூட்டமாக இது அமைந்தது. இதில் தம்பித்துரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    Thambidurai teases BJP and Congress

    தம்பித்துரை பேசுகையில், எம்ஜிஆர் நடிப்பின் மூலம் கிடைத்த புகழை மட்டும் வைத்து அரசியலுக்கு வரவில்லை. 30 ஆண்டு பொது வாழ்க்கைக்குப் பின்னர்தான் அரசியலுக்கு வந்தார். இன்று சில நடிகர்கள் எடுத்த எடுப்பிலேயே முதல்வராக வர நினைக்கின்றனர்.

    தமிழகத்தில் திராவிட இயக்கத்தை யாராலும் எதுவும் செய்ய முடியாது. குறிப்பாக தேசியக் கட்சிகளால் ஒன்றுமே செய்ய முடியாது. அவர்களால் முடிந்ததெல்லாம் நோட்டாவுடன் போட்டியிட மட்டுமே முடியும் என்றார் தம்பித்துரை.

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நோட்டாவை விட மிகக் குறைந்த வாக்குகளை பாஜக பெற்று கேலிக்கூத்தானதை அனைவரும் அறிவோம். அதைத்தான் தம்பித்துரை தனது பேச்சில் குத்திக் காட்டியுள்ளார்.

    English summary
    Loksabha Deputy speaker Thambidurai has slammed the national parties and said that, they can compete with NOTA only, they cannot not even touch the Dravidian parties.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X