For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க பாளையங்கோட்டையில் இளைஞர்கள் உண்ணாவிரதம்

தாமிரபரணி ஆற்றில் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதைக் கண்டித்து பாளையங்கோட்டையில் இளைஞர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் வெளிநாட்டு குளிர்பானங்களை தயாரிக்கும் ஆலைகள் தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி அளித்ததைக் கண்டித்து பாளையங்கோட்டையில் இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெப்சி, கோக் ஆகிய வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து அதன் விற்பனை மெல்ல மெல்ல நிறுத்தப்பட்டு வருகிறது. தமிழக வணிகர்கள் சங்கமும், கோக், பெப்சியை விற்க மாட்டோம் என்று முடிவு எடுத்துள்ளன.

 Thamirabharani Youngesters gathered and protest in Palayamkottai

வறட்சி காரணமாக விவசாயிகள மடிந்து வரும் நிலையில் தாமிரபரணி ஆற்றில் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைக் கண்டித்து பாளையங்கோட்டை, நெல்லை முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சமூகவலைதளங்கள் மூலம் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் திரண்ட இளைஞர்கள் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுகின்றனர்.

 Thamirabharani Youngesters gathered and protest in Palayamkottai

அப்போது அவர்கள் கூறுகையில் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் தவறான அறிக்கையாலேயே தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக குற்றம்சாட்டினர்.

English summary
The youths in Palayamkottai has gathered and fasting protest to protect Thamirabharai River.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X