For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகர் ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு.. கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தபெதிகவினர் கைது

நடிகர் ரஜினி பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

கோவை: தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக சமுக வலைதளங்களில் எழுதுகிறார்கள்? ஆனால் அதற்கெல்லாம் வருத்தப்படுவது கிடையாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்நிலையில் அவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் ரஜினிகாந்த கடந்த நான்கு நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். மாவட்ட வாரியாக 200 ரசிகர் என தினம் 600 ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வந்தார். முதல் நாள் ரசிகர்கள் சந்திப்பில் அவர் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது என கூறியது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

Thanthai Periyar Dravida katchi stage protest aganist rajini talk

இதுகுறித்து இன்றைய ரசிகர்கள் கூட்டத்தில் பேசிய ரஜினி, நான் முதல் நாள் கூட்டத்தில் அரசியலுக்கு வருவது பற்றியும் ரசிகர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேசியிருந்தேன். அந்தப் பேச்சு குறித்து டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட இணைய தளங்களில் கடுமையாக பலர் விமர்சித்திருந்தனர்.

விமர்சனம் வேண்டாம் என கூறவில்லை. ஆனால் தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கின்ற சிஸ்டன் சரிவர இயங்கவில்லை. விரைவில் நாம் போருக்கு தயாராக வேண்டும் என்று பேசினார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகர்களை ரஜினிகாந்த் இழிவாக பேசியதாக கூறி 100க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் ரஜினியின் உருவப்படத்தையும் அவர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

English summary
Thanthai Periyar Dravida katchi stage protest aganist rajini talk in kovai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X