For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று தேர்தல் நடந்தால் திமுக அபார வெற்றி பெறும்! #ThanthiTVOpinionPoll

Google Oneindia Tamil News

Recommended Video

    தந்தி டிவி நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு- வீடியோ

    சென்னை: லோக்சபாவுக்கு இன்று தேர்தல் நடந்தால் திமுகவே அதிக இடங்களில் வெற்றி பெறும் என தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தந்தி டிவி மக்கள் யார் பக்கம் என்ற கருத்துக் கணிப்பை நடத்தியது. இதன் முடிவுகளை கடந்த சில நாட்களாக அது வெளியிட்டு வருகிறது. இன்று சிலமுக்கிய கேள்விகளையும் அதற்கான பதில்களையும் அது வெளியிட்டது.

     Thanti TV opinion poll: DMK will capture more seats if poll conducted today

    அதில் முக்கியமானது இன்று லோக்சபாவுக்குத் தேர்தல் நடந்தால் யார் வெல்வார்கள் என்பதாகும். அதில் கிடைத்துள்ள சுவாரஸ்யமான முடிவுகள்.

    நாம் தமிழர் கட்சியும், பாஜகவும் தலா 3 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளனர். பாமகவுக்கு 4 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. கமல்ஹாசன் மற்றும் கட்சியே ஆரம்பிக்காத ரஜினி ஆகியோருக்கு தலா 5 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

    டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 8 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளது. முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும் இது. முக்கியக் கட்சிகளை விட, ரஜினி, கமல் ஆகிய காந்தங்களை விட அதிக ஆதரவை தினகரன் பெறுகிறார்.

     Thanti TV opinion poll: DMK will capture more seats if poll conducted today

    அதிமுகவின் கதை இன்னும் சுவாரஸ்யமானது. சிதைந்து சின்னாபின்னமாகிப் போய் விட்டதாக கருதப்படும் அதிமுகவுக்கு 25 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. இது மிகப் பெரிய ஆச்சரியமாகும். அதிமுக சரிந்துள்ளது. ஆனால் சாயவில்லை என்பதை இது நிரூபித்துள்ளது.

    திமுகவுக்கு 41 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதாவது இன்று தேர்தல் நடந்தால் திமுக அமோக வெற்றி பெறும் என்று இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மற்ற கட்சிகளுக்குக் கிடைத்துள்ள மொத்த வாக்குகள் 6 சதவீதம் ஆகும்.

    English summary
    Thanthi TV opinion poll has said that DMK will get 41% support if Polls conducted for LS today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X