For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்களுக்கு ஏன் இந்த இழிநிலை?.. இங்கிலாந்திலிருந்து வாசகர் ராம் கூறுவதைக் கேளுங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் இலவச திட்டங்கள் தொடர்பாகவும் மழை வெள்ளத்தில் அவை அடித்துக் கொண்டு போனது தொடர்பாகவும் இங்கிலாந்திலிருந்து நமது வாசகர் ராம் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

அரசு கொடுத்த மிக்சி, கிரைண்டரெல்லாம் ஆத்தோட போச்சே....( /news/tamilnadu/people-worried-over-the-freebies-washed-away-flood-240829.html) என்ற செய்திக்கு அவர் கொடுத்துள்ள கருத்து.. அவரது வார்த்தைகளில் அப்படியே...

அரசு அங்கே கடன் வாங்கி இங்கே கொடுத்தது இலவசம்களை அள்ளி, அதனால் மக்கள் ஒவ்வொருவர் தலையிலும் அவர்களை அறியாமலே கடன் சுமையை இன்றைய அ தி மு க அரசு ஏற்றி விட்டது.

Thatstamil reader Ram comments on TN Govt's freebies

காரணம் ஆட்சியை தக்க வைக்க வேண்டும். முழு தொகுதிகளும் நமக்கே என்று மக்கள் ஆதரவு இருப்பதாக மத்திய அரசுக்கு காட்டிக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் இன்றைய அரசும் மக்களை ஏமாற்றிக் கொண்டு தான் உள்ளது.

ஒரு அரசின் வேலை நியாய விலை அம்மா ப்ராண்ட் இட்லி, பொங்கல், வடை சுடுவது விற்பது அல்ல. அம்மா ப்ராண்ட் தண்ணீர் போத்தலில் அடைத்து விற்பது அல்ல. இலவச மிச்சி, கிரைண்டர், மின் விசிறி,ஆடு, மாடு கொடுப்பது அல்ல.

நிர்வாகம் என்பது படத்தில் பாடலுக்கு உடலை வளைத்து ஆடுவது போல இலகுவானது அல்ல. சாலை மேம்பாடு, பாலம் கட்டுதல், அரச நிறுவனம்கள் மூலம் அரசுக்கு வருவாயை பெருக்குவது, எல்லோரிடமும் பாரபட்சம் இல்லாமல் வரி வசூல் செய்வது, அபரிமித விவசாய விளை பொருட்கள், கடல் உணவுகளை ஏற்றுமதி செய்து வருவாயை பெருக்குவது, குளம் தூர் வருதல், நீர் சேகரிப்பு மேலாண்மை என்று எத்தனையோ இருக்குது.

மற்ற நாடுகள் எப்படி வளர்ந்தன, எந்த எந்த வழிகளில் மக்களின் வாழ்வு ஆதாரத்தை உயர்த்தலாம் என்று அவை சிந்தித்து செயல் ஆற்றும் போது, எந்த சினிமாவை வளைக்கலாம், எப்படி மிடாஸ் வருமானத்தை உயர்த்தலாம், எவ்வளவு நிலத்தை அபகரிக்கலாம், எவன் தலையில் துண்டு போட வைக்கலாம், எவனிடம் எங்கு, எந்த வழிகள் உண்டோ அந்த வழிகளில் கமிஷன் அடிக்கலாம் என்று இன்றைய தமிழக ஆட்ச்சியாளர் நினைத்து செயல்படுவதால் தமிழர்களுக்கு இந்த இழி நிலை இயற்கையின் சீற்றத்தினால் ஏற்பட்டு உள்ளது.

மக்கள் இனியும் திருந்தாது விடின் இதை விட மோசமான கொடுமைகளை சந்திக்க வேண்டி வரும். நாம் செய்வது அனைத்தையும் நம் கண்ணுக்கு புலப்படாத உயர்ந்த சக்தி பார்த்துக் கொண்டே இருக்கிறது. மிஞ்சும் போது இப்படி அந்த சக்தியை நினைக்க வேண்டி, கலங்க வேண்டி வரும் என்று கூறியுள்ளார் ராம்.

English summary
Oneindia Tamil's reader Ram from UK has commented on Chennai rains and the free gifts of TN govt to the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X