• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"லவ் யூ அப்பா".. தந்தையர் தினத்தையொட்டி நெக்குருகிய தட்ஸ்தமிழ் வாசகர்கள்!

|

சென்னை: தந்தையர் தினத்தையொட்டி ஒன்இந்தியா தமிழ் பேஸ்புக் தளத்தில் தங்களது தந்தையரின் பாசம் குறித்தும், அன்பு குறித்தும், அவர்கள் மீது தாங்கள் கொண்டுள்ள பேரன்பையும் கொட்டி பாச மழையில் நனைய வைத்து விட்டனர் தட்ஸ்தமிழ் வாசகர்கள்.

அந்த அன்புக் குவியலை அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கிறது. தந்தை குறித்து நெக்குருகும் வாசகர்கள் தாங்களும், தந்தையுமாக இருக்கும் படங்களையும் அனுப்பிக் குவித்து விட்டனர்.

நேற்று அதுகுறித்த ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். இன்றும் அந்த பாச மழையிலிருந்து மேலும் சில துளிகள்...

மறக்க முடியாத அப்பா...

மறக்க முடியாத அப்பா...

என் பெயர் லோகராஜா. இப்போது நான் என்ஜீனியரிங் படித்துள்ளேன். 2011ம் ஆண்டு மே 15 என்னால் மறக்க முடியாத நாள். நான் டாக்டராக விரும்பினேன். ஆனால் சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. எனது தந்தை, நீ படிக்க விரும்புவதை படி, நான் பிச்சை எடுத்தாவது படிக்க வைக்கிறேன் என்றார். எனக்கு அழுகை வந்து விட்டது. பின்னர், இல்லப்பா,. நான் டாக்டர் ஆகனும்தானே நீங்களும் ஆசைப்படுறீங்க. நான் பிஎச்டி படித்து டாக்டராகி விடுகிறேன் என்று ஆறுதல் கூறினேன். இருவரும் சேர்ந்து அழுதோம். அதை என்னால் மறக்க முடியாது. எனது தந்தை நல்ல ஆசிரியராக, ஆதரவாளராக, உத்வேகம் தருபவராக இருக்கிறார். என்னால் ஒரு வார்த்தையில் அவர் மீதான அன்பை வெளிப்படுத்த முடியாது. ல வ்யூ டாட்.

லவ் மை டாட்

லவ் மை டாட்

அஷு இளங்கோ: ஐ லவ் மை டாட்

நான் அப்பாவானபோது

நான் அப்பாவானபோது

நாராயணசாமி குமரன்: அப்பா! அப்பா என்ற வரியின் அர்த்தத்தை, நான் அப்பாவாக ஆன பிறகு தான் அதன் அருமையை உணர்ந்தேன். அது ஒரு புனிதமானது. வீட்டின் தலைவனாக, கணவனாக, தந்தையாக வழி நடத்தி நான் ஒரு புது மனிதனாக பிறக்கின்றான் ஒவ்வொரு சமயத்திலும் அவர் தான் நம் அப்பா! எனக்கு ஒரு ஹீரோவாகவும் நண்பனாகவும் ஒரு வழிகாட்டியாகவும் இருக்கின்றார். அன்றும்! இன்றும்! என்றென்றும்!

இலக்கியா

இலக்கியா

இலக்கியா தனது அன்புத் தந்தையுடன் இருக்கும் படத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஐ லவ்யூ அப்பா

ஐ லவ்யூ அப்பா

விக்கி: அன்று முதல் முறையாக 6-ம் வகுப்பிலே விடுதி செல்ல நான் தயாரான நேரம் என் அப்பா என்னிடம் கூறிய ஓர் அறிவுரை " டேய்! தண்ணி, சிகரெட்-னு இல்லாம இவ்ளோ நாள் இருந்துட்ட, இனியும் அப்டியே இரு.. அது உன் நல்லதுக்கு தான்" ( அவருக்கும் அப்பழக்கம் இல்லை .நான் 6-12 விடுதி தான்.. கல்லூரி காலமும் விடுதி தான்) School days full -ஆ அந்த பழக்கம் இல்லாம இருந்தேன்.. College days -லயும் அப்பபுடி தான் இருந்தேன்..ஆனால் College 2nd year Hostel admission -ஆக என் அப்பா வார்டனை சந்தித்தார்.. அப்போ அந்த Warden எனக்கு தண்ணி, சிகரெட் பழக்கம் இருக்குனு சொன்னாரு.. அதற்கு அடுத்த நொடி " என் பையன் மேல வேற Complaints இருந்தா சொல்லுங்க.. அவனை பத்தி எனக்கு தெரியும்".. இது வரைக்கும் அதைப்பற்றி என்னிடம் ஒரு வார்தை கூட என்னிடம் கேட்கல.. இப்போவும் என் அப்பா ஆசைப்படி தான் உள்ளேன்.. I love u appppppa..Happy father's day apppppppppa..

கலையரசி

கலையரசி

வாசகர் கலையரசி தனது தந்தையுடன் எடுத்துக் கொண்டு அனுப்பியுள்ள பாசப் படம்.

என்னோடு இல்லாவிட்டாலும்

என்னோடு இல்லாவிட்டாலும்

ராலின் - He is not with me at this time :(.. His memories wont fade... Luv my dad always.. he passed away on 2010 sep7th

அம்மாவாக மாறிய அப்பா

அம்மாவாக மாறிய அப்பா

ஜென்னி - சின்ன வயசுலேயே அம்மாவை மிஸ் பண்ணிட்டேன். அதுக்கப்புறம் எங்க அம்மா இடத்துல இருந்து எங்க அப்பா என்னைப் பாத்துக்கிட்டாரு. எத்தனை பேருக்கு இந்த வரம் கிடைக்கும்னு தெரியலை. ஆனா நான் ரொம்ப ஹேப்பி ஆக இருக்கேன். லவ் யூ அப்பா. அனைத்துத் தந்தையருக்கும் ஹேப்பி பாதர்ஸ் டே.

அப்பாவுக்காக பிரார்த்தியுங்கள்

அப்பாவுக்காக பிரார்த்தியுங்கள்

இது தாமஸ் என்ற வாசகரின் உருக்கமான செய்தி - நண்பர்களே, இது எனது அப்பா. இப்போது அப்பாவுக்கு உடம்பு சரி இல்லை. அவருக்காக அனைவரும் பிரார்த்தியுங்கள். ஐ லவ் மை டாட்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Thatstamil readers had express their love on their fathers in our FB page. Here are some more messages.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more