For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டுப் புரட்சியின் போது சமத்தாக செயல்பட்ட மயிலாப்பூர் துணை கமிஷனருக்கு 'புரமோஷன்'!

சென்னை மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு விழுப்புரம் சரக டிஜஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு விழுப்புரம் சரக டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது அவர் சிறப்பாக செயல்பட்டார் என கூறப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 35 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி, மதுரை, உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The Deputy Commissioner of Mylapore, Balakrishnan, has been promoted as Vilapuram DIG

மயிலாப்பூர் துணை கமிஷனராக இருந்த பாலகிருஷ்ணன் விழுப்புரம் சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு பலக்கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

போராட்டம் அமைதியாக நடைபெற இரவு பகலாக மெரினா பகுதியில் பாதுகாப்பு பணிகளை இவர் மேற்கொண்டார். மேலும் மெரினா போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் அதுபோன்ற ஒரு போட்டம் நடைபெற்றுவிடக் கூடாது இளைஞர்கள் அங்கு திரண்டுவிடக் கூடாது என்பதில் துணை பாலகிருஷ்ணன் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யூனிபார்மில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு இவர் அளித்த நேர்காணல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதேபோல் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து ஃபேஸ்புக்கில் போடப்பட்ட கண்டன கருத்துக்களையும் அவர் ஏற்றுக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரை விழுப்புரம் சரக டிஐஜியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

English summary
The Deputy Commissioner of Mylapore, Balakrishnan, has been promoted as Vilapuram DIG. He was said to have done well during the protest in Marina for the Jallikattu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X