For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதவி பறிப்பு எதிரொலி- அரூர், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு 'திண்டுக்கல் பூட்டு'!

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய்பபட்டதை தொடர்ந்து அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ அலுவலகங்களுக்கு பூட்டுப்போடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

தருமபுரி: எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய்பபட்டதை தொடர்ந்து அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ அலுவலகங்களுக்கு பூட்டுப்போடப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் இடம் அளித்தார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் ஒன்றிணைந்து டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர்.

இதற்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவையும் அவர்கள் திரும்பப்பெற்றனர்.

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்

இதையடுத்து அவர்கள் அனைவரையும் சபாநாயகர் தனபால் நேற்று தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். சபாநாயகர் தனபாலின் இந்த உத்தரவு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அரசிதழில் வெளியீடு

இதைத்தொடர்ந்து எம்எல்ஏககள் தகுதிநீக்கம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து தினகரன் தரப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

எம்எல்ஏ அலுவலகங்களுக்கு பூட்டு

எம்எல்ஏ அலுவலகங்களுக்கு பூட்டு

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ
அலுவலகங்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.அரூர் எம்.எல்.ஏ முருகன், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ பழனியப்பன் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலியான தொகுதிகள்

காலியான தொகுதிகள்

எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அந்த தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எம்எல்ஏ தொகுதி அலுவலகங்களுக்கு பூட்டுப்போடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The disqualifying MLAs office locked in Arur and Papirettipatti constituency. Speaked Dhanapal disqualifide Dinakaran support MLAs yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X