2015ல் அதிர வைத்த டோர்னியர் விமான விபத்து... 34 நாள் தேடுதல் வேட்டை... 3 விமானிகள் பலியான கதை!
சென்னை: ஆபரேசன் ஆம்லா ஒத்திகைக்காக கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி புறப்பட்ட கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான டோர்னியர் ரக சிறிய விமானம், மாயமானது. அதேபோல விமானப்படைக்குச் சொந்தமான விமானம் இன்று மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்ட டோர்னியர் ரக சிறிய விமானம் கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் கடலோர காவல் படையில் சேர்க்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி அந்த விமானத்தில் சுபாஷ் சுரேஷ், எம்.கே.டோனி ஆகிய விமானிகளும், துணை கமாண்டர் வித்யாசாகரும் ஒத்திகையில் ஈடுபட்டனர். விமானம் மாயமானதால் அவர்கள் மூவரும் என்னவானார்கள் என்ற அச்சம் பரவியது.
34 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் ஜூலை 10ம் தேதி பாண்டிச்சேரி அருகே கடலில் டோர்னியர் விமானத்தின் பாகங்கள் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து நடத்திய தேடுதலில், ஜூலை 11ம் தேதி 3 உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டது. டிஎன்ஏ பரிசோதனைக்குப் பின்னர் 2015 ஆகஸ்ட் 11ம் தேதி மூவரின் உடலும் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

ரோந்து பணி
சென்னை விமானப்படை தளத்தில் இருந்து கடலோர காவல் படைக்குச் சொந்தமான ‘சிஜி 791' என்ற ‘டார்னியர்' ரக சிறிய விமானம் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி மாலை 6 மணிக்கு தமிழகம் மற்றும் புதுவை கடல் பகுதியில் வழக்கமான ரோந்து பணிக்காக சென்றது.

தொடர்பு துண்டிப்பு
சிதம்பரம் அருகே 16 கடல் மைல் தொலைவில் பறந்து சென்றபோது இரவு 9.23 மணிக்கு திருச்சியில் உள்ள ரேடார் கண்காணிப்பு கருவியில் இருந்து விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. டோர்னியர் விமானம் காணாமல்போனது குறித்த தகவல் இரவு 10.45 மணிக்கு இந்திய கடலோர காவல் படைக்கு கிடைத்தது.

தேடுதல் வேட்டை
இதையடுத்து, உடனடியாக தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. தமிழக மற்றும் இந்திய கடலோர காவல்படை மற்றும் கடற்படை வீரர்கள் அந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தன. மேலும், பாராசூட் மூலமும், நீர் மூழ்கி கப்பல் மூலமும் தேடுதல் பணி நடைபெற்றது.

பிரம்மாண்ட தேடுதல் வேட்டை
மாயமான விமானத்தை தேடும் பணியில் கடலோர காவல் படையைச் சேர்ந்த 4 கப்பல்களும் கடற்படையைச் சேர்ந்த 4 கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டன. அத்துடன், ‘பி-8ஐ' என்ற போர் விமானமும் பணியில் ஈடுபடுத்தப் பட்டது.

தேடலுக்கு பலன்
விமானம் காணாமல் போன இடம் சிதம்பரத்தில் இருந்து 16 கடல் மைல் தொலைவிலும், கடலூரில் இருந்து 27 கடல் மைல் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 32 கடல் மைல் தொலைவிலும் இருப்பது ஜூலை 10ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு
காணாமல் போன விமானத்தின் கருப்புப் பெட்டி, குரல் பதிவு கருவி ஆகியவை ஒலிம்பிக் கேன்யான் கப்பலின் உதவியுடன், கடற்படையின் சிந்துத்வஜ் என்ற நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கண்டெடுக்கப் பட்டுள்ளது. பிச்சாவரத்தில் இருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ள பரங்கிப்பேட்டையில் 950 மீட்டர் ஆழத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது.

உடல்கள் கண்டுபிடிப்பு
தொடர்ந்து நடத்திய தேடுதலில், ஜூலை 11ஆம் தேதி விமானத்தில் பயணம் செய்த 3 பேரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த உடல்கள் டி.என்.ஏ. ஆய்வுக்காக அனுப்பட்டது. இந்நிலையில், அந்த உடல்கள் டோர்னியர் விமான விபத்தில் உயிரிழந்த 3 விமானிகள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

மீண்டும் ஒரு விமானம் மாயம்
ஜூன் 8ம் தேதி மாயமான விமானத்தில் பயணம் செய்த விமானிகளின் உடல்கள் ஜூலை 11ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டு டிஎன்ஏ சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 11, 2015 அன்று ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஒரு ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னையில் இருந்து அந்தமானுக்கு சென்ற விமானம் மாயமாகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications