For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பல்லோ ஆம்புலன்ஸுக்கு போன் போட்ட டிஎஸ்பி யார்?.. பி.எச்.பி. கேள்வி!

ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் செப்டம்பர் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் 1066 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொண்ட போலீஸ் டிஎஸ்பி யார் என்று முன்னாள் சபாநாயகர் பி.எச

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: போயஸ் தோட்டத்திலிருந்து செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனை ஆம்புலன்ஸ் சேவையான 1066-க்கு தொடர்பு கொண்டு பேசிய டிஎஸ்பி யார் என்று பி.எச். பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் செய்தியாளர்களை பி.எச்.பாண்டியன் சந்தித்தார்.

The DSP called to Apollo Hospital Ambulance, who is that? Asks P.H.Pandian

அப்போது அவர் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன் ஆம்புலன்ஸ் கொண்டுவருமாறு அவரது போயஸ் தோட்டத்தில் இருந்து அப்பல்லோ மருத்துவமனையின் 1066 ஆம்புலன்ஸ் சேவை தொடர்பு கொள்ளப்பட்டது. ஆம்புலன்ஸை வரசொன்னது காவல் துறை டிஎஸ்பி. அவர் யார் என்று எங்களுக்கு தெரியவில்லை.

அப்பல்லோவில் இருந்து ஆம்புலன்ஸ் எத்தனை மணிக்கு புறப்பட்டு எத்தனை மணிக்கு போயஸ் தோட்டத்துக்கு சென்றது. பின்பு அங்கிருந்து எத்தனை மணியளவில் அப்பல்லோ மருத்துவமனையை அடைந்தது. ஆம்புலன்ஸில் ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் யார்? யார்? அவர் சரியாக எத்தனை மணிக்கு அனுமதிக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மனோஜ் பாண்டியன் பேசுகையில், ஜெயலலிதா இறந்த செய்தியை 30 நிமிடங்கள் தாமதமாக அறிவித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
At what time Madam Jayalalitha was taken to Hospital, A DSP called to Apollo for ambulance, who is he? asks P.H.Pandiyan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X