For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கால்களில் ‘சக்கரம்’ கட்டி... முயலைவிட வேகமாக ஓடும் நட்சத்திர ஆமை... சென்னை வண்டலூரில்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வண்டலூர் உயிரியில் பூங்காவில் ஒரு பெண் நட்சத்திர ஆமையின் கால் பாதிக்கப்பட்டு ஊனமடைந்தது. இதையடுத்து அந்த ஆமைக்கு சக்கர கால்கள் பொருத்தப்பட்டு அது தற்போது வழக்கமான ஆமைகளை விட படு வேகமாக, சூப்பராக நடமாடி வருகிறது.

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், 14 நட்சத்திர ஆமைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்பூங்காவில் இயற்கையாகக் காடுகளில் உள்ள கீரிப்பிள்ளைகள், இந்த ஆமைகள் அடைப்பிடத்திற்குள் நுழைந்து நட்சத்திர ஆமைகளின் கால்கள் மற்றும் இதர பகுதிகளைக் கடித்து சேதப்படுத்திவிட்டன.

இவ்வாறு காயமடைந்த ஆமைகள் கைப்பற்றப்பட்டு பூங்கா விலங்கு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு கால்நடை மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டது.

பெண் நட்சத்திர ஆமை...

பெண் நட்சத்திர ஆமை...

அதில், ஒரு பெண் நட்சத்திர ஆமைக்கு மட்டும் முன்னங்கால்கள் நடக்கமுடியாத அளவிற்கு ஊனம் ஏற்பட்டுவிட்டது. இதனால், இந்த நட்சத்திர ஆமையால் நடமாடவும் மற்றும் உணவைத் தேடிச் செல்லவும் இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது.

சக்கரங்கள்...

சக்கரங்கள்...

இதனை சரிசெய்வதற்காகப் பூங்கா கால்நடை மருத்துவர் குழு சிறப்பு ஏற்பாட்டினை செய்தது. அதன்படி இரண்டு சக்கரங்கள் முனைகளில் பொருத்தப்பட்ட கம்பி ஒன்று உறுத்தல் தராத ‘எப்பாக்சி' கலவைக் கொண்டு நட்சத்திர ஆமையின் அடிப்புற ஓட்டின்மீது ஒட்டப்பட்டது.

வசதியாக உள்ளது...

வசதியாக உள்ளது...

தற்பொழுது, இந்தச் சக்கரங்கள் உதவியுடன் நட்சத்திர ஆமை வழக்கத்தைவிட வேகமாகத் தாம் விரும்பும் இடத்திற்குச்சென்று வரவும், உணவைத் தேடிச் செல்லவும் முடிகிறது.

ஆமை ஹேப்பி அண்ணாச்சி...

ஆமை ஹேப்பி அண்ணாச்சி...

இதுவரை தனிமைப்படுத்தப்பட்டு கூட்டத்திலிருந்து விலகியிருந்த இந்த நட்சத்திர ஆமை, தற்பொழுது சக்கரங்கள் உதவியுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English summary
A star tortoise at the Arignar Anna Zoological Park at Vandalur can now move faster than the 14 other bigger tortoises in her enclosure. Ironically, following an injury.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X