For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டோல்கேட்களில் தொடரும் சண்டை சச்சரவு, வாக்குவாதம்... மெத்தனத்தில் நெடுஞ்சாலை ஆணையம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Tollgate issue: Highway authority is acting irresponsible

    சென்னை: சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை கொண்டுவரப்பட்டது முதல் வாகன ஓட்டிகளுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே நாள்தோறும் சண்டை சச்சரவும், வாக்குவாதமும் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக பாஸ்டேக் ஸ்கேனர்கள் கோளாறு காரணமாக இரண்டுமுறை பணம் செலுத்த வேண்டிய அவலம் ஏற்படுவதால் வாகன உரிமையாளர்கள் மத்தியில் பாஸ்டேக் முறைக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.

    முதலில் பாஸ்டேக் முறையை வரவேற்ற லாரி உரிமையாளர்கள் கூட இப்போது அதில் இருக்கும் குழப்பங்களை பார்த்து வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

    அவசரப்பட்ட அழகிரி... ஆட்டிப்படைக்கும் மாவட்ட தலைவர்கள்... காங்.குழப்பம் அவசரப்பட்ட அழகிரி... ஆட்டிப்படைக்கும் மாவட்ட தலைவர்கள்... காங்.குழப்பம்

    சுங்கச்சாவடி

    சுங்கச்சாவடி

    நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நாள் ஒன்றுக்கு இரண்டரை லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. அதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் டோல்கேட்களில் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் பாஸ்டேக் முறையில் பணம் பிடித்தம் செய்யும் மின்னணு முறையை நெடுஞ்சாலை துறை ஆணையம் கொண்டு வந்துள்ளது.

    தகராறு

    தகராறு

    இந்த பாஸ்டேக் முறையில் தொடரும் குழப்பங்களால் சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் ஏற்கனவே கூறியிருந்தது போல், பாஸ்டேக் ஸ்கேனர் கருவி கோளாறு தான். இதை கவனத்தில் கொண்டு அதை சீர்செய்ய வேண்டிய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் மெத்தனத்தில் உள்ளது.

    வலியுறுத்தல்

    வலியுறுத்தல்

    மீண்டும் கட்டண முறையையே டோல்கேட்களில் தொடர வேண்டும் அல்லது பாஸ்டேக் பொருத்தாத வாகனங்களுக்கு அபராதத் தொகை ஏதுமின்றி சாதாரண கட்டணத்தை பெற வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

    நீதிமன்றம்

    நீதிமன்றம்

    இதனிடையே சுங்கச்சாவடிகளில் நிலவும் குழப்பங்களை களைய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்திடம் குட்டு வாங்குவதற்கு முன்பே தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தனது தூக்கத்தை கலைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாகும்.

    English summary
    The Highway Authority is acting irresponsibly
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X