For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சமூக மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு!

சமூக மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Google Oneindia Tamil News

தென்காசி: சமூக மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசியில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் சமூக மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் காஜா முஹைதீன் தலைமை தாங்கினார்.

The Iftar fast opening ceremony was held in Thenkasi

மனித நேய ஜனநாயக கட்சி மேற்கு மாவட்ட பொருளாளர் செய்து அலி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது கலந்து கொண்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஒரு தீர்மானத்தை சட்டசபையிலும், அமைச்சரவையிலும் கொண்டுவரவேண்டும். இன்று வரை ஸ்டெர்லைட் எதிராக போராடிய மக்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த கைது நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். போராடிய மக்கள் மீது மேலும் மேலும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்வது சரியான செயலாக இருக்க முடியாது.

நீட் தேர்வை தமிழில் எழுதிய தமிழக மாணவர்களுக்கு கிட்டத்தட்ட 49 வினாக்கள் மொழிமாற்றம் செய்யப்படும் போது தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அதற்கான மதிப்பெண்களை வழங்குவதற்கு அரசு உடனடியாக முயற்சி செய்ய வேண்டும். அந்த மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கிடும் விதமாக அமைந்து விடக் கூடாது. உடனடியாக அந்த மாணவர்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.

அரசு ஊழியர்கள் ஆசிரியருடைய அமைப்பான ஜாக்டோ ஜியோ தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இன்றைய தினம் பேரணியாக புறப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலனை செய்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் சாதீர், இந்திய யூனியன் முஸ்லீம் லீம் மாநில துணை செயலாளர் வி.டி.எஸ்.ஆர் முகமது இஸ்மாயில், நெல்லை மாவட்ட சிறுபாண்மை மக்கள் நலக்குழு உறுப்பினர் பால்ராஜ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் துப்பாக்கி பாண்டியன், எஸ்.டி.பி.ஐ , நகர தலைவர் செய்து மஹுமுது, மாநில துணை செயலாளர் செய்து அலி, மாநில செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது உட்பட மாநில, மாவட்ட மற்றும் நகர உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

English summary
The Iftar fast opening ceremony was held on behalf of the Manitha Neya democratic party in Thenkasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X