For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசுக்கு சம்மட்டி அடி: சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி

சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை- வீடியோ

    சென்னை: சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    சிலைக்கடத்தல் வழக்கில் ஐஜி பொன் மாணிக்கவேலின் விசாரணை திருப்தியளிக்கவில்லை என்று கூறிய தமிழக அரசு, சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    மேலும் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணையும் பிறப்பித்தது. சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சிபிஐக்கு மாற்ற எதிர்ப்பு

    சிபிஐக்கு மாற்ற எதிர்ப்பு

    இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு மாற்றும் தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    உயர் அதிகாரிகளை காப்பாற்ற

    உயர் அதிகாரிகளை காப்பாற்ற

    அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயரதிகாரிகளை காப்பாற்றும் நோக்கில் தமிழக அரசு சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சிபிஐக்கு மாற்ற இடைக்காலத்தடை

    சிபிஐக்கு மாற்ற இடைக்காலத்தடை

    சிபிஐக்கு மாற்றும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர்.

    ஒரு நிமிடம் கூட அனுமதிக்க முடியாது

    ஒரு நிமிடம் கூட அனுமதிக்க முடியாது

    சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க ஒரே நாளில் உத்தரவிட்டது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மேலும் ஒரு நிமிடம் கூட தமிழக அரசின் அரசாணை அமலில் இருக்க அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

    நீதிமன்ற அவமதிப்பு

    நீதிமன்ற அவமதிப்பு

    சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு நீதிமன்ற அவமதிப்பு என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    English summary
    The Madras High Court has imposed an interim ban on CBI probe into Idol theft case. Chennai high court imposed interim ban on Govt Go on the idol theft case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X