For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி, பெரிய ஸ்பீக்கர்களை பயன்படுத்த ஹைகோர்ட் தடை!

தமிழகத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பெரிய ஸ்பீக்கர்களை பயன்படுத்த ஹைகோர்ட் தடை விதித்துள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: தமிழகத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி மற்றும் பெரிய ஸ்பீக்கர்களை பயன்படுத்த மதுரை ஹைகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் திருமணம், கோவில் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கூம்புவடிவ ஒலிப்பெருக்கிகள் மூலம் சினிமா பாடல்கள் மற்றும் பக்திப் பாடல்களை ஒலிபரப்புவது வழக்கம்.

The Madurai High Court bench banned cone-shaped speakers and large speakers in Tamil Nadu

தலைவர்களின் பிறந்தநாளின் போதும் பொதுக்கூட்டங்களிலும் இதுபோன்ற ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி அற்புத குழந்தை இயேசு தேவாலயத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவதை எதிர்த்து ஜெயராமன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த உயர்நீதிமன்றம் கிளை தடை விதித்து உத்தரவிட்டது.

குழந்தைகள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி பொதுநல மனுவின் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

English summary
The Madurai High Court bench has banned the use of cone-shaped speakers and large speakers in Tamil Nadu. A person named Jayaraman filed a petition againsed cone shaped speakers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X