For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செயின்ட் ஜார்ஜ் கோட்டை டூ செங்கோட்டை... இதுதான் ஜெ. போடும் கணக்கா...?

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் பதவிக்கு பலரையும் போல முதல்வர் ஜெயலலிதாவும் குறி வைத்துள்ளார். அதிமுகவினரும் அடுத்த பிரதமர் ஜெயலலிதாதான் என்று உற்சாகமாக சொல்லி வருகிறார்கள். மேலும் இந்தியாவின் முதல் தமிழ் பிரதமர் என்ற போஸ்டர்களும் தமிழகத்தை ஆங்காங்கே அலங்கரிக்க ஆரம்பித்துள்ளது.

அதிமுகவினரும் சரி, முதல்வர் ஜெயலலிதாவும் சரி, பிரதமர் பதவிக்கு திடீரென குறி வைக்க ஒரு குறிப்பிட்ட கணக்கே காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தக் கணக்கின் அடிப்படையில்தான் மிகவும் வெளிப்படையாக பிரதமர் பதவி குறித்து ஜெயலலிதா தரப்பு பேசி வருகிறது என்றும் சொல்கிறார்கள். சரி அது என்ன கணக்கு.. வாங்க பார்க்கலாம்.

அம்மாவின் ஆசையில் லாஜிக் இருக்கு...!

அம்மாவின் ஆசையில் லாஜிக் இருக்கு...!

முதல்வர் ஜெயலலிதாவின் பிரதமர் கனவு லாஜிக்கோடுதான் இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அதாவது சில குறிப்பிட்ட ஆய்வுகளைப் பார்த்தால் இது உண்மைதான் என்று புலனாகும் என்பது அவர்களது வாதம்.

இப்படி நடந்தால்

இப்படி நடந்தால்

இப்படி நடந்தால் இப்படி ரிசல்ட் வரும் .. இதுதான் ஜெயலலிதாவின் கணக்கு. அதாவது probability அடிப்படையிலானது ஜெயலலிதாவின் கணக்கு.

தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் 6 மாநிலங்கள்

தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் 6 மாநிலங்கள்

லோக்சபாவைப் பொறுத்தவரை இந்தியாவின் 6 மாநிலங்களில் கிட்டத்தட்ட 54 சதவீத தொகுதிகள் உள்ளன. இவைதான் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் ஆட்சியமைக்கும் கட்சியை நிர்ணயிக்கின்றன. இந்த மாநிலங்களில் யாருக்கு அதிக சீட் கிடைக்கிறதோ அவர்களே பொதுவாக ஆட்சியைப் பிடிக்கிறார்கள் அல்லது வேறு யாராவது ஆட்சியமைக்க உதவுகிறார்கள்.

பலமுனைப் போட்டிக்கு வாய்ப்பு

பலமுனைப் போட்டிக்கு வாய்ப்பு

இந்த ஆறு மாநிலங்களிலும் வரும் லோக்சபா தேர்தலில் பலமுனைப் போட்டிக்கான வாய்ப்புகள் படு பிரகாசமாக உள்ளன. எனவே இங்கு வெற்றி என்பது பல கட்சிகளால் பங்கு போடப்படும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. குறிப்பிட்ட கட்சிக்கு அதிக சீட் என்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. குறிப்பாக தேசியக் கட்சிகளுக்கு இங்கு அதிக அளவிலான சீட்கள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு என்கிறது ஆய்வுகள்.

ஆம் ஆத்மியால் ஜெ.வுக்கு லாபம்தான்

ஆம் ஆத்மியால் ஜெ.வுக்கு லாபம்தான்

மேலும் ஆம் ஆத்மி கட்சி ஜெயலலிதாவுக்கு பெரும் லாபமாக அமைந்துள்ளதாகவும் கணக்குகள் தெரிவிக்கின்றன. ஆம் ஆத்மி கட்சியின் பாதிப்பால், காங்கிரஸும் சரி, பாஜகவும் சரி எதிர்பார்த்த அளவுக்கு இந்த மாநிலங்களில் வெற்றி பெற முடியாது என்பது அதிமுக தரப்பினரின் கணிப்பாகும்.

பெரிய மாநிலங்களில் நான்கு முனைப் போட்டி கன்பர்ம்ட்

பெரிய மாநிலங்களில் நான்கு முனைப் போட்டி கன்பர்ம்ட்

உ.பி, பீகார் போன்ற பெரிய மாநிலங்களில் நிச்சயம் நான்கு முனைப் போட்டி உறுதி என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

தமிழகம், ஆந்திராவில்

தமிழகம், ஆந்திராவில்

தமிழகத்திலும், ஆந்திராவிலும் யாருக்கு வெற்றி கிடைக்கிறதோ, அந்தக் கட்சிகளை விட உ.பி., பீகாரில் வெற்றி பெறும் கட்சிகள் குறைந்த இடங்களைப் பெறும் என்றும் கணிக்கப்படுகிறது.

3வது பெரிய கட்சியாக வருமா அதிமுக?

3வது பெரிய கட்சியாக வருமா அதிமுக?

அந்தக் கணக்குப்படி பார்த்தால் காங்கிரஸ், பாஜகவுக்கு அடுத்து அதிமுகதான் அதிக இடங்களை வென்ற 3வது பெரிய கட்சியாக வரும் என்றும் கணிக்கப்படுகிறது.

18 மாநிலங்களில் 94 சதவீத சீட்கள்

18 மாநிலங்களில் 94 சதவீத சீட்கள்

இந்தியாவின் 94 சதவீத லோக்சபா தொகுதிகள் 18 மாநிலங்களில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான சீட்களை ஒரு குறிப்பிட்ட கட்சியே வெல்லும் வாய்ப்பில்லை. மேலும், எந்த ஒரு கட்சியும் நிச்சயம் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் அதிக இடங்களை வெல்வதற்கும் வாய்ப்பில்லை. அதையும் ஜெயலலிதா தனக்கு சாதகமாக பார்க்கிறார்.

தமிழகம், ஆந்திராவின் கையில்

தமிழகம், ஆந்திராவின் கையில்

கடந்த சில தேர்தல்களைப் பார்த்தால், உ.பி, மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் அதிக இடங்களை வென்ற கட்சிகளுடன் ஒப்பிட்டால், தமிழகம், ஆந்திராவில்தான் அதிக இடங்களை வென்ற கட்சிகள் உள்ளன.

உதாரணத்திற்கு உ.பி.

உதாரணத்திற்கு உ.பி.

உ.பியில் கடந்த தேர்தலில் அதிகபட்சமாக ஒரு கட்சி 35 தொகுதிகளை வென்றது. ஆனால் தமிழகம், ஆந்திராவில் சேர்த்துப் பார்த்தால், அங்கு அதிக இடங்களை வென்ற கட்சிகளை விட உ.பியில் வென்ற கட்சி பெற்ற இடங்கள் குறைவுதான்.

ஆந்திராவில் தற்போது நிலைமை சரியில்லை

ஆந்திராவில் தற்போது நிலைமை சரியில்லை

தற்போது ஆந்திராவில் நிலைமை சரியில்லை. தெலுங்கானா விவகாரத்தால் அங்கு கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு சிதறிப் போகும் வாய்ப்புகள் உள்ளன.

தமிழகத்தில் பிரகாசமான வாய்ப்புகள்

தமிழகத்தில் பிரகாசமான வாய்ப்புகள்

எனவே தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. அந்தக் கட்சி நாங்கள்தான் என்பது அதிமுகவினரின் கருத்தாகும், எதிர்பார்ப்பாகும்.

6 மாநிலங்களில் முட்டி மோதப் போகும் 11 கட்சிகள்

6 மாநிலங்களில் முட்டி மோதப் போகும் 11 கட்சிகள்

தற்போது நிலைமையை கணக்கில் எடுத்தால், 291 சீட்களை அதாவது 54 சதவீத சீட்களை வைத்துள்ள 6 மாநிலங்களில் மொத்தம் 11 கட்சிகள் வெற்றிக்காக முட்டி மோதப் போகின்றன. இதில் ஆம் ஆத்மி சேர்க்கப்படவில்லை. கடந்த காலங்களில் இந்த மாநிலங்களில் அதிக பட்சம் 7 பெரிய கட்சிகள்தான் போட்டியில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சீட்டுகள் பிரியும்

சீட்டுகள் பிரியும்

எனவே கடந்த தேர்தல்களை விட இந்த முறை இங்கு கட்சிகளுக்குக் கிடைக்கும் சீட்டுகள் குறையும். அதாவது இந்த 11 கட்சிகளுக்கிடையே சீட்டுகள் பலமாக பிரியும். எனவே எந்த ஒரு கட்சிக்கும் அதிக அளவிலான சீட்கள் கிடைக்க வாய்ப்பில்லை.

ஆம் ஆத்மியின் வருகை

ஆம் ஆத்மியின் வருகை

இப்போது ஆம் ஆத்மியையும் இந்தக் கணக்கில் சேர்த்தால், இந்த கட்சிகளுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் மேலும் பலவீனமடைவதை ஊகிக்கலாம்.

பிராந்திய கட்சிகளுக்கு பெரும் வாய்ப்பு

பிராந்திய கட்சிகளுக்கு பெரும் வாய்ப்பு

கடந்த தேர்தல்களை விட இந்த முறை பிராந்தியக் கட்சிகளுக்கு அதிக இடங்களைப் பெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இப்போதைக்கு அதிமுக அல்லது திமுக, திரினமூல் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்பது ஒரு எதிர்பார்ப்பு.

காங்., பாஜகவைக் கலக்கப் போகும் தமிழகம்

காங்., பாஜகவைக் கலக்கப் போகும் தமிழகம்

தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு பெரும் சவாலாக விளங்கப் போகும் மாநிலங்களாக மேற்கு வங்கம், தமிழ்நாடு, பீகார், ஆந்திரா ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு பிராந்தியக் கட்சிகள் அல்லது காங்கிரஸ், பாஜக அல்லாத தேசியக் கட்சிக்கே அதிக அளவிலான சீட்கள் கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கணிக்கப்படுகிறது. இங்கு அதிக இடங்களைப் பெறுவோர் ஒன்றாக சேர்ந்து கை கோர்த்து விட்டால், இவர்களின் ஆசி இல்லாமல் மத்தியில் யாருமே ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால்...

இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால்...

இப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்துத்தான்,தான் பிரதமர் பதவியில் அமருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கருதுவதாக கூறப்படுகிறது.

மாயாஜாலம் நடந்தால்

மாயாஜாலம் நடந்தால்

ஜெயலலிதா எதிர்பார்ப்புப்படி நடக்காமல் போய், ஏதாவது மிகப் பெரிய மாயாஜாலம், அந்த 6 மாநிலங்களில் நடந்தால், அதாவது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கே அதிக இடங்கள் கிடைத்து விட்டால் மட்டுமே ஜெயலலிதா பிரதமர் பதவிக்கு வருவது கனவாகும் சூழல் ஏற்படும். அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் கூற முடியாது, இருக்கிறது என்றும் உறுதிபடச் சொல்ல முடியாது. அப்படித்தான் தற்போதைய நிலை உள்ளது.

பலமுனைப் போட்டிகளை எதிர்பார்க்கும் ஜெயலலிதா

பலமுனைப் போட்டிகளை எதிர்பார்க்கும் ஜெயலலிதா

எனவே இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் குறிப்பாக இந்த ஆறு மாநிலங்களில் பலமுனைப் போட்டிகள் வந்து, கட்சிகளுக்கிடையே சீட்கள் பிரிவதையே முதல்வர் ஜெயலலிதா பெரிதும் எதிர்பார்ப்பதாக, விரும்புவதாக தெரிகிறது. அதில்தான் அவரது பிரதமர் கனவும் அடங்கியுள்ளது என்பதால் அதிமுகவுக்கும் இந்த பலமுனைப் போட்டிதான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

மக்கள் கணக்கு என்னவோ...

மக்கள் கணக்கு என்னவோ...

இந்தக் கணக்கின் அடிப்படையில்தான் பிரதமர் பதவிக்கான போட்டியில் தான் உறுதியுடன் இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கருதுவதாகவும் தெரிகிறது. பார்க்கலாம்.. மக்கள் கணக்கு என்னவென்று...

English summary
Tamil Nadu Chief Minister Jayalalithaa wants to be prime minister. "From Fort St George (the legislative assembly of Tamil Nadu) to Red Fort" is the slogan for the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) 2014 Lok Sabha campaign. In probability theory, the expected value of a particular event is defined as the weighted average of all possible outcomes of that event. Are Jayalalithaa's expectations to be PM the weighted average of all possible outcomes of the 2014 Lok Sabha elections? The analysis below shows that Jayalalithaa's prime ministerial ambitions can indeed be backed by sound rationale.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X