For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் நாளை மொகரம் கடைபிடிக்கப்படும் - தலைமை காஜி அறிவிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 12-ம் தேதி (நாளை) மொகரம் கடைப்பிடிக்கப்படும் என மாநில தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார்.

கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்து ஷியா பிரிவு முஸ்லிம்களால் துக்க தினமாக மொகரம் அனுசரிக்கப்படுகிறது.

The mokaram festival on tomorrow

அதேவேளையில், ஷியா முஸ்லிம்கள் தவிர்ந்த ஏனைய இஸ்லாமியர், மொகரம் மாதத்தின் பத்தாவது நாளில் நோன்பிருந்து, தன்னைத்தானே கடவுள் என்று பிரகடணப்படுத்திய ஃபிர்அவ்ன் என்ற மன்னன் மற்றும் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா நபியை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி வருகின்றனர்.

இந்த மொகரம் பிறையின் பத்தாவது நாள் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டாம் தேதி பிறை தெரிந்ததை தொடர்ந்து, இந்த ஆண்டின் மொகரம் நாள் வரும் 12-ம் தேதி கடைப்பிடிக்கப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார்.

English summary
Government Chief Kazi declares mokaram festival on wednesday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X