For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் கிடைக்கும் புதிய முறை அமலுக்கு வந்தது !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் பாஸ்போர்ட் பெறுவதற்கான புதிய திட்டத்தின்படி சென்னை மண்டலத்தில் விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கும் புதிய முறை அமலுக்கு வந்ததுள்ளதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஒரு விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு ஆகிய 3 ஆவணங்களின் நகலை இணைத்து விண்ணப்பித்தால் வழக்கமான கட்டணமான 1500 ரூபாய் செலுத்தி 3 நாட்கள் அல்லது ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம்.

The new system introduced by passport office

இவற்றுடன் விண்ணப்பதாரர் நோட்டரி ஒருவரின் கையொப்பத்துடன் கூடிய பிரமான பத்திரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். பிப்ரவரி 1 முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. விண்ணப்பதாரருக்கு பாஸ்போர்ட் வழங்கிய பின்னர் போலீஸ் விசாரணை அறிக்கை பெறப்படும்.

போலீஸ் விசாரணை அறிக்கை கிடைக்க அதிக நாட்கள் ஆகின்றன. இதை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு ஒரு புதிய அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளது. இந்த அப்ளிகேஷனை கொண்டு மொபைல் அல்லது டேப்ளட் மின்னனு பொருட்கள் மூலம் போலீஸார் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர் குறித்த தகவல்களை விசாரித்து, சரிபார்த்து அறிக்கையை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு ஒரே தினத்தில் அனுப்ப முடியும்.

தமிழக போலீசார் இந்த அப்ளிகேஷனை கொண்டு பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களை விசாரித்து, சரிபார்க்கும் நடைமுறைக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழக அரசுக்கு, மத்திய வெளியுறவுத்துறை கடிதம் எழுதியுள்ளது. இதனால் போலீஸ் விசாரணை அறிக்கை கிடைப்பது துரிதமாகும்' என்று பாலமுருகன் தெரிவித்தார்.

மேலும், சென்னையில் அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டு பாஸ்போர்ட் இழந்த 3,970 பேருக்கு இதுவரை மாற்று பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது பாஸ்போர்ட் பெற பிப்ரவரி 7ம் தேதி கடைசி நாள் என்றும் கூறினார்.

English summary
Chennai Regional Passport Officer said, Passport applicants will get passport within one week
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X