For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண்ட்ராய்ட் போன்களை தாக்கும் ஓன்மீ வைரஸ்.. வாட்ஸ் ஆப்பிற்கு ஆப்பு வைக்கும் திட்டம்!

ஆண்ட்ராய்ட் போன்களை சமீப காலமாக ஓன்மீ (Ownme) என்ற வைரஸ் தாக்கி வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: ஆண்ட்ராய்ட் போன்களை சமீப காலமாக ஓன்மீ (Ownme) என்ற வைரஸ் தாக்கி வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

மோசமான ஐ லவ் யூ வைரஸ் தொடங்கி கணினி மற்றும் செல்போன்களை தாக்கும் வைரஸ்கள் உலகில் நிறைய இருக்கிறது. இந்த நிலையில் ஆண்ட்ராய்ட் போன்களை மட்டும் குறிவைத்து களமிறங்கி இருக்கும் வைரஸ்தான் ஓன்மீ (Ownme) என்ற வைரஸ்.

இது போன்களில் தானாக தரவிறங்கி அந்த போன்களை பெரிய அளவில் பாதிக்க வைக்கிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட தகவல்களை திருடவே இந்த வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

எப்படி நடக்கிறது

எப்படி நடக்கிறது

இந்த ஓன்மீ (Ownme) என்ற வைரஸ் போன்களில் நாம் இணையத்தை பயன்படுத்திக் கொண்டு இருக்கும் போதே பின்பக்கம் டவுன்லோட் ஆகிவிடும். கிரிப்டோஜாக்கிங் என்ற முறையில் இந்த ''அட்டாக்'' நிகழ்த்தப்படுகிறது . நம்முடைய இணைய பயன்பாடும், நாம் தேடும் சில குறிப்பிட்ட தளங்களும் இந்த வைரஸ் உள்ளே வர கதவாக இருக்கிறது.

வாட்ஸ் ஆப் பிரச்சனை

வாட்ஸ் ஆப் பிரச்சனை

இது அதிகமாக பாதிப்பது வாட்ஸ் ஆப்பைதான். ஆம், வாட்ஸ் ஆப்பிள் நாம் பேசும் தகவல்களை அதிகம் திருடவே இந்த வைரஸ் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் பேஸ்புக், கேலரி ஆகியவையும் இதன் மூலம் ஹேக் செய்யப்படுகிறது.

அனைத்து தகவலையும்

அனைத்து தகவலையும்

வாட்ஸ் ஆப்பில் நாம் அனுப்பும் புகைப்படங்களில் திருடுவது, நாம் பேசுவதை திருடுவது ஆகிய ஹேக்கிங்கை இது செய்கிறது. அதேபோல் கேலரியில் நாம் வைத்திருக்கும் பர்சனல் புகைப்படங்களையும் இது திருடுகிறது. நாம் மொபைலில் வைத்திருக்கும் 90 சதவிகித தகவல்களை இதன் மூலம் திருட முடியும்.

வெளியே அனுப்பும்

வெளியே அனுப்பும்

அதன்பின் நம்முடைய இணையம் மூலம் இந்த தகவல்களை தங்கள் சர்வருக்கு இவர்கள் ஏற்றிக்கொள்வார்கள். அதை வைத்து மிரட்டல் வேலைகளை இவர்கள் செய்வதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ்களை இப்போது இருக்கும் 'ஆன்டி வைரஸ்' ஆப்கள் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் ஆகும்.

English summary
The new virus called OwnMe stealing becomes a headache to Android users.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X