For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமர் பாலம் 18,400 ஆண்டுகள் பழமையானதாம்.. அண்ணா, சென்னை பல்கலை மாணவர்கள் ஆய்வில் தகவல்!

ராமர் பாலம் 18,400 ஆண்டுகள் பழமையானது என அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ராமர் பாலம் இருந்தது உண்மை தான்-அமெரிக்க ஆராய்ச்சி முடிவுகள்- வீடியோ

    சென்னை: ராமர் பாலம் 18,400 ஆண்டுகள் பழமையானது என அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா- இலங்கை இடையே தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை கடற்பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன.

    இது ராமர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் என இதிகாசங்களில் கூறப்படுகிறது. இந்த பாலம் ஆதாம் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.

    மாணவர்கள் ஆய்வு

    மாணவர்கள் ஆய்வு

    ஆனால் இந்த பாலம் வெறும் கற்பனைதான் என்ற வாதமும் ஒரு பக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில் ராமர் பாலம் குறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும், சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் ஆய்வு ஒன்றை நடத்தினர்.

    18,400 ஆண்டுகள் பழமையானது

    18,400 ஆண்டுகள் பழமையானது

    அதில் ராமர் பாலம் 18,400 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போதும் கூட ராமர் பாலம் எந்த சேதமும் அடையவில்லை என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    700 ஆண்டுகளுக்கு முன் சுனாமி

    700 ஆண்டுகளுக்கு முன் சுனாமி

    கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி போன்று 700 ஆண்டுகளுக்கு முன்பும் சுனாமி ஏற்பட்டது என்பது உள்ளிட்ட பல அதிர்ச்சி தகவல்கள் இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளன.

    மனிதர்களால் கட்டப்பட்டது

    மனிதர்களால் கட்டப்பட்டது

    இதனிடையே ராமர் பாலம் மனிதர்களால்தான் கட்டப்பட்டுள்ளது என்று அமெரிக்க சயின்ஸ் சேனல் கடந்த மாதம் தெரிவித்தது. இந்தியா-இலங்கை நடுவேயான இந்த பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் சுமார் 7000 ஆண்டுகள் பழமையானவை என்றும் அமெரிக்க சயின்ஸ் சேனல் தெரிவித்தது.

    ஆனால் பாலத்திற்கு பின்

    ஆனால் பாலத்திற்கு பின்

    இந்த பாலம் 30 மைல்கள் நீளமானது என்றும் அங்கு மணல் திட்டுகள் உருவாகியுள்ளது உண்மைதான் என்றும் தெரிவித்தது. ஆனால் அந்த மணல் திட்டுகள் கற்களால் பாலம் அமைக்கப்பட்ட பிறகே உருவாகியுள்ளன என்றும் மணல் திட்டுக்களின் வயது சுமார் 4000 ஆண்டுகள்தான் என்றும் அமெரிக்க சயின்ஸ் சேனல் தெரிவித்தது.

    English summary
    The Ramar Palam is 18,400 years old says madras university and Anna university students research. Tsunami happened 700 years before like 2004 research result said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X