For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாயமான கடலோரக் காவல் படை விமானத்தைக் கண்டுபிடிக்க ஏன் இவ்வளவு திணறல்?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அருகே வங்கக் கடல் பகுதியில் மாயமான இந்தியக் கடலோரக் காவல் படையின் விமானத்தைக் கண்டுபிடிப்பதில் இவ்வளவு தாமதம் ஏற்பட பல காரணங்கள் கூறப்படுகின்றன.

சம்பவத்தன்று காணாமல் போனபோது அந்த விமானம் திடீரென 5000 அடி உயரத்திற்கு இறங்கியுள்ளது. அதுவும் 2 நிமிடத்தில் அந்த அளவுக்கு கீழே இறங்கியுள்ளது. மேலும் திடீரென ரேடாரிலிருந்து காணாமல் போயுள்ளது. உயரம் குறைந்த பின்னர் அது மேற்கு நோக்கி பறந்துள்ளது. பிறகு தெற்கிலும், அதன் பின்னர் கிழக்கிலும் கீழிறங்கி பின்னர் காணாமல் போயுள்ளது.

The reasons behind the delay in locating missing plane

அதன் பின்னர் அது என்ன ஆனது, எங்கு போனது, கீழே விழுந்ததா, எங்கு விழுந்தது என்பது குறித்து ஒரு துப்பு கூட கிடைக்கவில்லை இதுவரை.

துரதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் அவசரகாலத்திற்கு பயன்படும் இஎல்பி எனப்படும் லொகேட்டர் ஆக்டிவேட் ஆகவில்லை. எனவே விமானத்திலிருந்து உதவி கேட்டு எந்தத் தகவலும் வர முடியாமல் போய் விட்டது. இதனால்தான் அந்த விமானத்தின் இருப்பிடத்தை அறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாம்.

தற்போது தேடுதல் படையினர் விமானத்தைத் தேடி வரும் கடல் பகுதியானது 800 மீடட்ர் முதல் 1000 மீட்டர் வரை ஆழம் கொண்டதாகும். இதனால் ஆழ் கடல் தேடுதலில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற ஆழமான கடல் பகுதியில் அடியில் இருப்பதைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமமானது என்கிறார்கள் நிபுணர்கள்.

தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கிக் கப்பல் மாயமான விமானத்தின் சிக்னலை 20 முறை கண்டுபிடித்துள்ளது. அப்படி இருந்தும் கூட விமானம் இருக்கும் இடத்தை நெருங்க முடியாத நிலை நிலவுகிறது.

தற்போது உத்தேசமாக ஒரு கடல் பகுதியை முற்றுகையிட்டுள்ள தேடுதல் படையினர் அந்த இடத்தைச் சுற்றிலும் ஒன்றரை மைல் அளவில் தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளனர். எப்படியும் இந்த முறை ஏதாவது செய்தி கிடைக்கலாம் என்ற நம்பிக்கையும் உள்ளதாம்.

விமானம் மாயமானது என்று மட்டுமே தொடர்ந்து கூறி வரும் கடலோரக் காவல் படையினர், அது விபத்துக்குள்ளாகியிருக்குமா என்பது குறித்து சொல்ல மறுத்து வருகின்றனர். விமானம் சிக்கினால் மட்டுமே, கருப்புப் பெட்டி கிடைத்தால் மட்டுமே என்ன நடந்தது என்பது குறித்து அனுமானிக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

English summary
There are many reasons behind the delay in locating missing plane, say experts.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X