For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளிகள் திறப்பதற்கு முன்பே 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது தமிழக அரசு

வரும் 2018-ம் ஆண்டிற்கான 10, 11,12-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: பள்ளிகள் திறப்பதற்கு முன்பே 2018 ஆம் ஆண்டுக்கான 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில், சமீபகாலமாக பல புதிய அறிவிப்புகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. ரேங்கிங் நடைமுறைக்கு முடிவுகட்டி, கிரேட் முறையில் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

The state government has released exam date for the year of 2018

முதல் இடம், இரண்டாம் இடம் என்ற பதற்றமின்றி, மாணவர்கள் முதன்முறையாகத் தேர்வு முடிவுகளை எதிர்கொண்டார்கள். அரசின் இந்த முடிவுக்கு கல்வியாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அந்தவகையில் 2018 ஆம் ஆண்டுக்கான 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு கால அட்டவணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

  • 10ம் வகுப்பு பொதுத் தேர்வு 2018 மார்ச் 16ல் தொடங்கி ஏப்.20 வரை நடைபெறுகிறது.
  • 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2018, மே 23 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
  • பிளஸ் 1 தேர்வு மார்ச் 7ம் தேதி தொடங்கி ஏப்.16ல் தேதி முடிவடைகிறது.
  • 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2018, மே 30-ம் தேதி வெளியிடப்படுகிறது
  • 10, 11ம் வகுப்பு தேர்வு நேரம் 2 மணி 30 நிமிடம் ஆகும்.
  • 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதி வெளியிடப்படுகிறது.
  • 12-ம் வகுப்பிற்கான பொது தேர்வு மார்ச் 1-ம் தேதி துவங்கப்பட்டு ஏப். 6-ம் தேதி முடிவடைகிறது.
English summary
Tamilnadu state government has today released 10,11, 12th class exam date for the year of 2018
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X