For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துப்பாக்கியுடன் வந்த வீரப்பன்.. கடத்தப்பட்ட ராஜ்குமார்.. தேசத்தை உலுக்கிய திக் திக் கதை!

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவம் இப்போதும் அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்றுதான்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய வீரப்பன்... திக் திக் கதை

    சென்னை: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவம் இப்போதும் அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்றுதான். ஒரு வீரப்பனை பிடிக்க இந்திய அரசு தீவிரமாக களமிறங்கியது இந்த கடத்தல் சம்பவத்திற்கு பிறகுதான்.

    நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். 2000ம் ஆண்டில் தென்னிந்தியாவை உலுக்கிய கடத்தல் வழக்கு இதனால் முடிவிற்கு வந்துள்ளது.

    2000ல் வாழ்ந்தவர்களுக்கு இந்த கடத்தல் சம்பவம் மறந்து இருக்காது. எப்படி எல்லாம் இந்த கடத்தல் தென்னிந்தியாவை ஆட்டிப்படைத்தது, ஒரு ''கேங்ஸ்டர்'' எப்படி மூன்று மாநில போலீசை காடுமேடெல்லாம் அலையவிட்டார் என்ற கதையும் மிகவும் சுவாரசியமானது.

    வீரப்பன் வழக்கம்

    வீரப்பன் வழக்கம்

    சந்தன கடத்தல் வீரப்பனிடம் இருந்த ஒரு வழக்கமான விஷயம், முக்கியமான அதிகாரிகளை கடத்தி தேவையான காரியங்களை சாதித்துக் கொள்வது. அடிக்கடி போலீஸ் அதிகாரிகளை கடத்தி தனக்கு நெருக்கமானவர்களை விடுதலை செய்ய வைத்து இருக்கிறார் வீரப்பன். சுமார் 20 வருடங்கள் இவரை பிடிக்க மூன்று மாநில அரசுகள் கஷ்டப்பட்டது.

    எச்சரிக்கை விடுக்கப்பட்டது

    எச்சரிக்கை விடுக்கப்பட்டது

    இந்த நிலையில்தான் கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் கடத்த போகிறார் என்று கன்னட - தமிழ்நாடு மாநில உளவுத்துறை ராஜ்குமாருக்கு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் ராஜ்குமார் இதை பெரிய விஷயமாக நினைக்கவில்லை. எப்போதும் போல ஈரோட்டில் இருக்கும் தன்னுடைய பண்ணைவீட்டிற்கு வந்து செல்லும் வழக்கத்தை இவர் கொண்டு இருந்தார். போலீஸ் பாதுகாப்பும் இவருக்கு அளிக்கப்படவில்லை.

    [ராஜ்குமார் கடத்தல் வழக்கு.. 9 பேரும் விடுதலை.. அரசுத் தரப்பு மீது கோர்ட் சரமாரி குற்றச்சாட்டு! ]

    தகவல் கசிந்தது

    தகவல் கசிந்தது

    அதேசமயம் ஈரோட்டில் ராஜ்குமார் பண்ணைவீடு அருகே இருக்கும் காஜனுர் கோவில் ஒன்றிற்கு அடிக்கடி வீரப்பன் வந்து சென்று இருக்கிறார். இதனால் அடுத்த முறை வீரப்பன் அந்த கோவிலுக்கு வரும் போது கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும். எப்படியாவது போலீஸ் வீரப்பனை மடக்கி பிடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தது.

    யோசிக்கவில்லை

    யோசிக்கவில்லை

    ஆனால் போலீஸ் கமிஷனர் எம். எல். பாலச்சந்திரன் மற்றும் சிறப்பு அதிரடிப்படைத் (எஸ்.எல்.எப்) தலைவர் அர்சவர்தன் ராஜு தலைமையிலான குழு முக்கியமான விஷயம் ஒன்றை கவனிக்க மறந்தது. வீரப்பன் அந்த கோவிலுக்கு வந்து செல்வதை கவனித்த போலீஸ், அதே ஊரில்தான் ராஜ்குமார் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார் என்பது கவனத்தில் கொள்ள மறந்தது.

    துப்பாக்கி முனை

    துப்பாக்கி முனை

    இதை பயன்படுத்திக் கொண்ட வீரப்பன் 2000 ஜூலை 30 அன்று காஜனூரில் ராஜ்குமாருக்கு சொந்தமான பண்ணை வீட்டுக்கு உள்ளே புகுந்தனர். 11 பேர் கொண்ட குழு உள்ளே சென்றது. வீரப்பன் அதில் முன்னில் நின்றார். பெரிய மீசையுடன், கையில் பெரிய துப்பாக்கி வைத்துக் கொண்டே நின்றார். அவருடன் இருந்த 10 பேரிடமும் பெரிய பெரிய துப்பாக்கிகள் இருந்தது. வீட்டிற்குள் கதவை உடைத்துக் கொண்டு அதிரடியாக புகுந்தார் வீரப்பன்.

    பேசிவிட்டு சென்றார்

    பேசிவிட்டு சென்றார்

    ஆனால் உடனே அப்போதே வீரப்பன் ராஜ்குமாரை கடத்தவில்லை. சுமார் இரண்டு மணி நேரம் அவருடன் அமர்ந்து பேசிவிட்டு, அந்த வீட்டில் இருந்த பணியாளர்களுடன் பேசிவிட்டு, போலீசிடம் யாரும் வாயை திறக்க கூடாது என்று கூறிவிட்டு பின் ராஜ்குமாரை கடத்தி சென்றனர். இந்தியா முழுக்க இந்த விஷயம் பெரிய தலைப்பு செய்தியாக மாறியது.

    [உண்மை மறைப்பு.. ராஜ்குமார், பார்வதம்மா மீது போலீஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நீதிபதி கேள்வி]

    பெரிய கலவரம்

    பெரிய கலவரம்

    இதனால் தமிழ்நாடு கர்நாடக எல்லையில் பெரிய கலவரம் மூண்டது. கர்நாடகாவில் இருக்கும் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். தமிழக பத்திரிக்கை நிறுவனங்கள், தமிழர்களின் நிறுவனங்கள், கடைகள் கொளுத்தப்பட்டது. பல பேர் மோசமாக தாக்கப்பட்டனர். இரண்டு மாநில எல்லையிலும் தொடர் தாக்குதல்கள் நடந்தது.

    கோரிக்கை என்ன

    கோரிக்கை என்ன

    சிறையில் உள்ள தடா கைதிகளை எல்லாம் விடுவிக்க வேண்டும் என்பதே வீரப்பனின் கோரிக்கை. இந்த தடா கைதிகளில் பலர் வீரப்பனுக்கு நெருக்கமானவர்கள். இதற்கு இரண்டு மாநில அரசும் ஒப்புக்கொண்டது. ஆனால் அரசு எடுத்த முடிவை எதிர்த்து மைசூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வீரப்பனால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல்கரீம் இந்த மனுவை தாக்கல் செய்தார். இதனால் இவர்கள் விடுவிக்கப்படுவது தாமதம் ஆனது.

    போலீஸ் தேடுதல்

    போலீஸ் தேடுதல்

    இந்த நிலையில் பேச்சுவார்த்தை பலனளிக்காது என்று ஒருபக்கம் போலீஸ் தனிப்படைகள் உருவாக்கப்பட்டு வீரப்பன் தேடப்பட்டு வந்தார். ஆனால் வீரப்பன் தினம் தினம் தன்னுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். அவர் காட்டின் எந்த பகுதியில், எப்போது எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. ராஜ்குமார், நாகப்பா, கோவிந்தராஜூ ஆகிய முக்கிய மூன்று பேரையும் இடமாற்றிக் கொண்டே இருந்தார்.

    [ராஜ்குமார் கடத்தல் வழக்கு.. குற்றம் சாட்டப்பட்டோர் யார்.. விடுதலையானது யார்.. இதோ பட்டியல்!]

    பேச்சுவார்த்தையும் கேசட்டும்

    பேச்சுவார்த்தையும் கேசட்டும்

    இந்த நிலையில் இவர்களிடம் பேச தமிழக அரசு சார்பாக நக்கீரன் கோபால் தூதுவராக நியமிக்கப்பட்டார். அதேபோல் மூத்த அரசியல்தலைவர் பழ. நெடுமாறனும் வீரப்பனுடன் பேச அனுப்பப்பட்டார். கோபால் 7 முறையும், நெடுமாறன் 2 முறையும் வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். கடைசியாக நடந்த பேச்சுவார்த்தை தவிர வேறு எதுவும் வெற்றியடையவில்லை.

    கேசட்டுகள் வந்தது

    கேசட்டுகள் வந்தது

    ஆனால் இடையிடையே வீரப்பன், கோபால் மூலம் தொடர்ச்சியாக கேசட்டுகள் அனுப்பி வந்தார். பல எச்சரிக்கைகளை விடுத்து அவர் கேசட்டுகள் அனுப்பினார். இவரை பிடித்துக் கொடுத்தால் 5 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் வீரப்பன், ராஜுக்குமாரை விடுவிக்க ஒப்புக்கொண்டார்.

    எத்தனை நாள்

    எத்தனை நாள்

    மொத்தம் 108 நாட்கள் ராஜ்குமார் கடத்தப்பட்டு கைதியாக வைக்கப்பட்டு இருந்தார். இடையில் 52 நாட்களில் அவரது நண்பர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் ராஜ்குமார் கடைசியாகத்தான் விடுதலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இரண்டு மாநிலங்களிலும் பெரிய பதட்டத்தை உண்டாக்கியது.

    English summary
    The Story of Actor Rajkumar Kidnap and Veerappan's thug life.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X