For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செங்கோட்டை - ஆரியங்காவு இடையே சோதனை ரயில் இயக்கம்

Google Oneindia Tamil News

செங்கோட்டை: செங்கோட்டை - ஆரியங்காவு இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் சோதனை ரயில் இயக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு 1903 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டது. சென்னை, நாகப்பட்டினம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் ரயில் போக்குவரத்து நடைப்பெற்று வந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு இந்த தடத்தில் மீட்டர் கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

 The test train movement between senkottai - Aryankavu

அதன்பின்னர் செங்கோட்டை-புனலூர் இடையே 59 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை அமைக்கும் பணி 356 கோடி ரூபாய் செலவில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. தற்போது புனலூர் முதல் இடமன் வரை முதல்கட்ட பணிகள் முடிவடைந்தன. இதில் கடந்த மாதம் சோதனை ரயில் இயக்கம் நடைப்பெற்றது.

இரண்டாம் கட்டமாக செங்கோட்டை- ஆரியங்காவு இடையே 19 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த பாதையில் 900 மீட்டர் தூரம் மலையை குடைந்து அமைக்கப்பட்ட குகை வழியே நேற்று சோதனை முயற்சியாக அகல ரயில் சோதனை ஓட்டம் நடைப்பெற்றது.

 The test train movement between senkottai - Aryankavu

இந்த ரயில் சோதனை ஓட்டத்தில் மலைப்பாதையில் ஜல்லிக்கற்களை 4 கேரவங்களில் கொண்டு செல்லப்பட்டு ஆரியங்கா ரயில் நிலையம் முதல் பகவதிபுரம் ரயில் நிலையம் வரை தண்டவாளங்களில் சல்லி கற்களை கொட்டினர். பின்னர் சரக்கு ரயிலை இயக்கி சோதனை முயற்சி நடைப்பெற்றது.

English summary
The test train movement was between senkottai - Aryankavu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X