For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பினாமி அரசு பேச்சை கேட்காமல், உள்ளாட்சி தேர்தல் நடத்துங்கள்.. தேர்தல் கமிஷனுக்கு ஸ்டாலின் கோரிக்கை

பெங்களூர் சிறையில் உள்ள குற்றவாளி சசிகலாவின் பினாமி அரசான அதிமுக அரசின் பேச்சைக் கேட்காமல் உள்ளாட்சித் தேர்தல் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை உடனே தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவின் பினாமி அரசின் சொல்லை மாநில தேர்தல் ஆணையம் கேட்கக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், வரும் மே 14-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The TN Election commission should not act as per ADMK Govt wish, says MK Stalin

அதன்படி உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் இதுவரை தொடங்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தல் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் உடனே தொடங்க வேண்டும்.

வரும் மே 14-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்னும் அதற்கான பணிகள் தொடங்காமல் மாநில தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்ப்பது சரியல்ல. தங்கள் அரசின் மீதுள்ள அதிருப்தி காரணமாக தோற்றுவிடுவோம் என்ற எண்ணத்தில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போவதற்கான முயற்சிகளில் அதிமுக கவனம் செலுத்தி வருகிறது.

குற்றவாளியின் பினாமி அரசின் சொல்லை மாநில தேர்தல் ஆணையம் கேட்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Necessary steps have to be taken for Civic polls in TN, the TN EC should not act as per Binami Govt of Sasikala, condemns MK Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X