For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன்.. மத்திய அரசின் தலையாட்டி பொம்மை தமிழக அரசு: திருமாவளவன்

நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்டவை எதிர்க்காமல் மத்திய அரசுக்கு தலையாட்டிக் கொண்டு பொம்மை போல் செய்லபடுவதாக தமிழக அரசு மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திருச்சி: தேசிய தகுதி காண் தேர்வு, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றை எதிர்க்காமல் மத்திய அரசு கூறுவதற்கெல்லாம் தலையாட்டும் பொம்மை போல் தமிழக அரசு செயல்படுவதாக தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் கட்-ஆஃப் அடிப்படையில் நடைபெறுகிறது. இந்நிலையில் மருத்துவ சேர்க்கைக்கு நாடு முழுவதும் ஒரே நடைமுறையை பின்பற்றும் விதமாக நீட் தேர்வு நடத்த மத்திய அரசு தெரிிவத்தது.

The TN govt seems to be Tanjore Toy in NEET issue, says Thol.Thirumavalavan

இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க ஜெம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு 10 நாள்களுக்கு மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து தமிழக அரசு தீவிரம் காட்டாமல் தலையாட்டி பொம்மைபோல் செயல்படுகிறது. கூவத்தூரில் தங்கியிருந்து விட்டு தங்கள் சொந்த தொகுதிகளுக்குச் சென்ற அதிமுக எம்எல்ஏ-க்கள் போலீஸ் பாதுகாப்புடன் செல்வது வேடிக்கையாக உள்ளது.

English summary
In the wake of NEET, Hydrocarbon project issue, TN govt seems to be like Tanjore Doll, says Thol. Thirumavalavan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X