For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலாம் பிறந்த நாளை சர்வதேச மாணவர் தினமாக ஐநா சபை அறிவிக்கவில்லை.. ஐநா அதிகாரி கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை சர்வதேச மாணவர் தினமாக ஐநா சபை அறிவித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என இந்தியாவுக்கான ஐநா அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தன் வாழ்நாள் முழுவதும் மாணவர்களை ஊக்கப்படுத்தியவர். இறக்கும் போது கூட மாணவர்களுக்காக உரையாற்றியபடி உயிரைவிட்டவர் கலாம்.

இந்நிலையில் அப்துல் கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15ம் தேதியை சர்வதேச மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை அகில இந்திய தனியார் ஊழியர் சங்கம் சார்பிலும் வைக்கப்பட்டது.

கண்ணீரை வரவழைத்த வெங்காயத்தின் விலை.. வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது!கண்ணீரை வரவழைத்த வெங்காயத்தின் விலை.. வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது!

கலாம் பிறந்த நாள்

கலாம் பிறந்த நாள்

இந்நிலையில் அப்துல் கலாமின் பிறந்த நாளை சர்வதேச மாணவர் தினமாக கடந்த 2010ம் ஆண்டே ஐநா சபை அறிவித்துவிட்டதாக ஊடகங்களில், நாளேடுகளில் செய்திகள் வெளியாகின. ஆனால் அப்போது அதற்கான எந்த ஆவணங்களையும் ஊடகங்கள் வெளியிடவில்லை.

கல்லூரி ஊழியர் சங்கம்

கல்லூரி ஊழியர் சங்கம்

இதன் காரணமாக அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர் சங்க தலைவர் கே.எம். கார்த்திக் சார்பில் இந்தியாவில் உள்ள ஐநா தகவல் மைய அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் கலாமின் பிறந்த நாளை சர்வதேச மாணவர் தினமாக ஐநா அறிவித்ததாக வெளியான தகவல் குறித்து விளக்கம் கேட்கப்பட்டு இருந்தது.

வாக்கெடுப்பு நடத்தப்படும்

வாக்கெடுப்பு நடத்தப்படும்

இதற்கு பதில் அளித்துள்ள இந்தியாவுக்கான ஐநா அதிகாரி ராஜீவ் சந்திரன, ஐநா எந்த ஒரு தினத்தையும் அறிவிப்பதற்கு முன்பு, ஐநா பொதுக்குழுவில் அது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு இறுதியாக வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அறிவிக்கவில்லை

அறிவிக்கவில்லை

ஆனால் கலாம் பிறந்த நாள் விஷயத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள தினத்துக்காக நடத்தப்படவில்லை. எனவே அது தொடர்பான அனைத்து தகவல்களும் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்,

English summary
The United Nations had not declared kalam birthday October 15 as World Students' Day: UN official explanation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X