For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக விவசாயிகளை பாதிக்கும்.. தினகரன் வேதனை

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி வழக்கில் தமிழகத்துக்கான நீரை குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு- வீடியோ

    சென்னை: காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு சாதகமாவும் கர்நாடக விவசாயிகளுக்கு பாதகமாவும் உள்ளது.

    The verdict of the Supreme Court in the Cauvery case is saddening: TTV Dinakaran

    தமிழகம் கூடுதல் நீரை கேட்ட நிலையில் உள்ளதையும் குறைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து டிடிவி தினகரன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

    இத்தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் பாசன பரப்பின் அளவு, இருபோக விவசாயம் தற்போது கேள்வி குறியாகியுள்ளது என்றும் தினகரன் கூறியுள்ளார்.

    மற்றொரு டிவிட்டில் தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நீரின் அளவையாவது கர்நாடக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் அதனை மத்திய அரசு உறுதி செய்திட வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தெரிவத்துள்ளார்.

    English summary
    TTV Dinakaran has twitted in about the verdict of the Supreme Court in the Cauvery case is saddening. The verdict is a great damage to the Tamil Nadu farmers. The quantity of agriculture in Tamil Nadu has been questioned now.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X