For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடக்குமுறைக்கு எதிரான குரல்.. யார் இந்த சோபியா?

பாஜகவிற்கு எதிராக கோஷமிட்ட மாணவி சோபியா யார் என்று இணையத்தில் பலர் தேடி வருகிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சமூக வலைத்தளங்களில் சோபியா அதிகமாக தேடப்பட்டு வருகிறார்- வீடியோ

    சென்னை: பாஜகவிற்கு எதிராக கோஷமிட்ட மாணவி சோபியா யார் என்று இணையத்தில் பலர் தேடி வருகிறார்கள். தூத்துக்குடியை சேர்ந்த அவர் தற்போது கனடாவில் முனைவர் பட்டத்திற்காக படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று தூத்துக்குடி விமான நிலையத்தில் மாணவி சோபியா கோஷமிட்டார். இதனால் அவருக்கு தமிழக பாஜக தலைவர் தமிழசை சௌந்தரராஜனுக்கு வாக்குவாதம் நடந்துள்ளது.

    இதுகுறித்து தமிழிசை போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சோபியா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    தூத்துக்குடி பெண்

    தூத்துக்குடி பெண்

    சோபியா தூத்துக்குடி மாவட்டம் கந்தன் காலனியில் வசித்து வருகிறார். இவரது தந்தை சாமி, தாயார் மனோகரி. இவரது தந்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவர். தாயார் மனோகரி தலைமை செவிலியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

    படிப்பது என்ன

    படிப்பது என்ன

    சோபியா நிறைய டிகிரி படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் எம்எஸ்சி இயற்பியல் படித்துள்ளார். அதன்பின் கனடாவில் எம்எஸ்சி கணிதம் படித்தார். தற்போது அவர் கனடாவில் முனைவர் பட்டம் பெற, பிஎச்டி படித்துக் கொண்டுள்ளார். கனடாவில்தான் வசித்து வருகிறார்.

    ஏன் தூத்துக்குடி

    ஏன் தூத்துக்குடி

    இவர் கனடாவில் இருந்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். கனடாவில் இருந்து சென்னை வந்த அவர், சென்னையில் சில திருமண நிகழ்வுகளுக்கு சென்றுள்ளார். அதன்பின், அங்கிருந்து நேரடியாக தூத்துக்குடி வந்துள்ளார். அப்போதுதான் இந்த சம்பவமும் நடந்துள்ளது.

    ஏற்கனவே அப்படித்தான்

    ஏற்கனவே அப்படித்தான்

    இவர் ஏற்கனவே மாநில அரசு மீதும், மத்திய அரசு மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். புனேவில் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டது, திருமுருகன் காந்தி கைதானது, வளர்மதி கைதானது என்று தொடர்ந்து இவர் பல விஷயங்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பேசியுள்ளார்.

    English summary
    Ph.D studying student Sophia becomes viral in social media after her voice against BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X