For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அங்க வரை வைரல்.. அமெரிக்க பத்திரிக்கைகளில் வந்த ஆளுநர் பற்றிய நக்கீரன் கட்டுரை!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறித்த நக்கீரன் கட்டுரை அமெரிக்கா வரை வைரல் ஆகியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நக்கீரன் கோபாலை கைது செய்ததால் பிரபலமான கட்டுரை- வீடியோ

    சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறித்த நக்கீரன் கட்டுரை அமெரிக்கா வரை வைரல் ஆகியுள்ளது.

    இரண்டு நாள் முன் நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரை சிறையில் எடுக்க கூடாது என்று எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தது.

    அவருக்கு எதிராக ஆளுநர் மாளிகை புகார் அளித்து இருந்தது. அவர் சட்ட பிரிவு 124ன் கீழ் கைது செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நக்கீரன் இதழில் ஆளுநர் குறித்து வந்த கட்டுரை காரணமாக அவர் கைது செய்யப்பட்டார்.

    அந்த கட்டுரை

    நக்கீரன் இதழில் வெளியான கட்டுரையொன்றுதான் நக்கீரன் கோபால் கைதுக்கு காரணம். ''4 முறை ஆளுநரை சந்தித்தேன் : நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம்'' என்ற தலைப்பில் நக்கீரன் இதழில் வெளியான கட்டுரைதான் நக்கீரன் கோபால் மீதான நடவடிக்கைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    யாருக்குமே தெரியாது

    யாருக்குமே தெரியாது

    இந்த கட்டுரை வந்தது பலருக்கு தெரியாது. இந்த பிரச்சனை பூதாகரமாக ஆகும் வரை இது பலருக்கு தெரியாமல் இருந்தது. நக்கீரன் கோபால் கைதை அடுத்து, தமிழகம் முழுக்க மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க இந்த கட்டுரை வைரல் ஆனது.

    அமெரிக்க நாளிதழில் வந்தது

    அமெரிக்க நாளிதழில் வந்தது

    இந்த நிலையில் இந்த கைது குறித்தும், கட்டுரை குறித்தும் விரிவான கட்டுரை அமெரிக்க நாளிதழில் வந்துள்ளது. தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் விரிவான கட்டுரை வெளியாகி உள்ளது. நக்கீரன் கோபால் பெயரும், அந்த கட்டுரை குறித்த விவரமும், கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதும் சொல்லப்பட்டுள்ளது.

    வைரல்

    வைரல்

    அதோடு வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையில் நக்கீரன் இதழில் வந்த கட்டுரை குறித்தும் முழுக்க முழுக்க விரிவான விளக்கம் உள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெயரும் இதில் இடம்பிடித்துள்ளது. இந்தியாவிற்கு மட்டும் தெரிந்த கட்டுரை அமெரிக்கா வரை தற்போது வைரல் ஆகியுள்ளது.

     கிழித்து தொங்கவிட்டனர்

    கிழித்து தொங்கவிட்டனர்

    அதோடு வாஷிங்டன் போஸ்ட் இதழ் நிறைய கேள்விகளையும் கேட்டுள்ளது. இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் இதுதானா? இந்த விஷயத்திற்கு கூட கைது செய்வார்களா என்று கேள்வி கேட்டு கட்டுரை எழுதியுள்ளது. சாதாரணமாக போக வேண்டிய கட்டுரை.. அமெரிக்காவிற்கு பிளைட் ஏற்றிவிடப்பட்டுள்ளது!

    English summary
    The Washington Post writes article on Nakkheeran Gopal arrest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X