For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பூரில் சிறுமியை கடத்த முயன்ற இளைஞர்.. கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

சிறுமியை கடத்த முயன்றதாக இளைஞர் ஒருவரை பொதுமக்கள் கட்டிவைத்து அடித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கடத்த முயன்ற இளைஞரை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்- வீடியோ

    திருப்பூர்: திருப்பூரில் சிறுமியை கடத்த முயன்றதாக இளைஞர் ஒருவரை பொதுமக்கள் கட்டிவைத்து அடித்துள்ளனர்.

    திருப்பூர் சின்னாண்டி பாளையம், ராஜகணபதிநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், இவர்து மனைவி உமா. இவர்கள் பனியன் கம்பனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 10 வயது பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

    The young man tries to kidnap the girl in Tirupur

    இந்நிலையில் இன்று காலை தனது மகளை அழைத்துக்கொண்டு உமா காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமி தனியாக நிற்பதை பார்த்த இளைஞர் ஒருவர் தூக்கிக்கொண்டு ஓட முயன்றுள்ளார். இதனை கண்ட உமா கூச்சலிட்டதும் அந்த இளைஞர் சிறுமியை கீழே வீசி விட்டு தப்பியோடி அருகில் இருந்த வீட்டிற்குள் ஒளிந்துகொண்டார்.

    உமாவின் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்குள் புகுந்து அந்த இளைஞரை இழுத்து வந்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதனையடுத்து சிலர் மத்திய காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வந்த போலீசாரிடம் அந்த நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த மத்திய காவல் துறையினர் அந்த இளைஞரிடம் விசாரண மேற்கொண்டனர். மேலும் இளைஞரின் பாக்கெட்டில் அடையாள அட்டை இருப்பதையும் கண்டறிந்தனர். அதில் அவரது பெயர் சிவா என்பதும் அவர் கே.வி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறுமியை ஏன் தூக்கி சென்றார் என்பது குறித்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

    English summary
    The people attacked the young men who tried to kidnap the girl in Tirupur. Then the police were handed over to the police. Police Department has registered a case against the young man
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X