For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்ற இளைஞர் காங்கிரசார் அதிரடி கைது

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி நகரில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், விரிவாக்கப் பணிகளை தடுத்து நிறுத்தக் கோரியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆலையைச் சுற்றியுள்ள 12 கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The Youth Congress arrest protest against the Sterlite plant in Tutucorin

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். இதன்காரணமாக பல பகுதிகளில் ஆங்காங்கே கருப்பு கொடியும் அவர்கள் ஏற்றி வைத்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் பொதுமக்கள் பலரும் தங்களை இணைத்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்ற இளைஞர் காங்கிரசாரை போலீசார் கைதுசெய்தனர்.

அதேபோல பனிமயமாதா பேராலயத்தின் வளாகத்தில் அமர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

English summary
Youth Congress activists arrested in Thoothukudi town to insist on closing the Sterlite plant. Many of the civilians joined in the protest and shouted against the federal government. The police arrested the Youth Congress who tried to sieve the Sterlite plant. Youth as well as public staged in the campus of the Church.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X