For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேனியில் காதல் ஜோடி கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு தண்டனை

தேனியில் காதல் ஜோடி கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு ஆயுள் தண்டனையுடன் தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

தேனி: தேனி சுருளி நீர்வீழ்ச்சி உள்ள வனப்பகுதியில் காதல் ஜோடி கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு ஆயுள் சிறையும் தூக்கு தண்டனையும் வழங்கி தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்தவர் தங்கநிதி. இவரது மகன் எழில் முதல்வன் (23). இவர் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் முத்துத்தேவன் பட்டியைச் சேர்ந்த கஸ்தூரி என்ற கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில், இருவரும் கடந்த 2011-ஆம் ஆண்ட மே மாதம் 14ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து கஸ்தூரியின் தந்தை தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

காதல் ஜோடிகள்

காதல் ஜோடிகள்

இந்த நிலையில் நிர்வாண நிலையில் ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் சுருளி அருவிப் பகுதியில் காட்டுப் பகுதியில் சடலமாக கிடந்தவர்கள் எழில் முதல்வன், கஸ்தூரி ஆகியோர் என்பது தெரிய வந்தது.

எழில் முதல்வன் கொலை

எழில் முதல்வன் கொலை

விசாரணையில் இருவரும் சுருளி அருவிக்கு சென்றுவிட்டு அங்குள்ள காட்டு பகுதியில் பேசி கொண்டிருந்தபோது ஒரு மர்மக் கும்பல் அங்கு வந்து கஸ்தூரியை உல்லாசமாக இருக்க அழைத்தது. இதை எழில் முதல்வன் தட்டிக் கேட்டதால் அவரை கொலை செய்தது.

7 ஆண்டுகள்

7 ஆண்டுகள்

பின்னர் கஸ்தூரியை பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு அந்த கும்பல் தப்பியோடிவிட்டது. இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

தூக்கு தண்டனை

தூக்கு தண்டனை

இந்நிலையில் இந்த வழக்கில் தேனி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செந்தில் குமரேசன் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றவாளி திவாகருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி , தூக்கு தண்டனையையும் விதித்து தீர்ப்பளித்தார்.

English summary
College girl sexually assaulted and murdered by gang in Surili falls , Theni. As of the girl's lover also murdered. In this case Theni court issues death sentence for the accused.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X