For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி

அமெரிக்காவில் தேனி எம்பி ரவீந்திரநாத் குமார் பேசியதை கைதட்டி வரவேற்றனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    நான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்... அமெரிக்காவில் ஓ.பி.ஆர்

    சென்னை: "நான் மோடியின் மண்ணான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்"... தேனி எம்பி ஓபி. ரவீந்திரநாத் குமார் இப்படி சொன்னதுதான் தாமதம்.. கூடியிருந்தோர் ஆச்சரியத்திலும், உற்சாகத்திலும் கை தட்டி மகிழ்ச்சியுடன் அதை வரவேற்றனர்.

    பிரதமர் மோடியின் தீவிர ரசிகராகவே மாறி விட்டார் ரவீந்திரநாத் குமார். மோடியை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புகழ்வதற்கு அவர் தவறுவதில்லை. நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அத்தனை பேரையும் அசரடித்தவர் ரவீந்திரநாத் குமார்.

    இப்போதும் கூட கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மோடியை புகழ்ந்து பேசுவதற்கு அவர் தவறுவதில்லை. அந்த அளவுக்கு ரவீந்திரநாத் குமாருக்கு மோடி மீது பிரியம் ஜாஸ்தி.

    என்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்?என்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்?

    தங்க தமிழ்செல்வன்

    தங்க தமிழ்செல்வன்

    இப்போது தனது தந்தை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் அமெரிக்கா வந்துள்ளார் ரவீந்திரநாத் குமார். இங்கு ஓபிஎஸ்ஸுக்கு தங்க தமிழ் மகன் விருதும், சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருதும் கிடைத்துள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் பெரும் உற்சாகத்துடன் உள்ளனர்.

    மோடியின் மண்

    மோடியின் மண்

    சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது விழாவில் கலந்து கொண்டு பேசியவர்களில் ரவீந்திரநாத் பேச்சுதான் செமையாக இருந்தது. இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, "நான் ரவீந்திரநாத் குமார். மோடியின் மண்ணான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்" என்று அவர் ஆரம்பமே அசத்தலாக ஆரம்பித்தார். கூட்டத்தினர் கைத்தட்டி வரவேற்றனர்.

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்றம்

    தொடர்ந்து ரவீந்திரநாத் குமார் பேசுகையில், நான் முதல் முறையாக தேர்தலில் நின்று வென்று இந்திய நாடாளுமன்றத்திற்குச் சென்றிருக்கிறேன். அதிமுக கூட்டணியில் நான் மட்டுமே வென்று சென்றுள்ளேன். எனக்கு முதல் முறை நாடாளுமன்றத்தில் பேசும்போது நடுக்கமாகவே இருந்தது. காரணம் நான் தனி ஆளாக போயிருக்கிறேன். ஆனால் அதன் பிறகு அந்த நடுக்கம் பயம் குறைந்து தொடர்ந்து 28 மசோதாக்கள் மீது பேசியுள்ளேன்.

    சந்தோஷம்

    சந்தோஷம்

    எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க முக்கியக் காரணம் எனது கட்சியான அதிமுகதான். அதிமுகவுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் என்று ரவீந்திரநாத் பேசியுள்ளார். அவரது பேச்சு தந்தையாக ஓபிஎஸ்ஸுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம்.

    எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    இதற்கிடையே, மோடியின் மண் என்று ரவீந்திரநாத் குமார் பேசியதை சிலர் சர்ச்சையாக்கி வருகின்றனர். இது முதல்வர் காதுக்கும் கூட போயிருக்கிறதாம். ஆனால் "அதில் என்ன தவறு இருக்கிறது. மோடிதானே தற்போது இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். எனவே அந்த அர்த்தத்தில் அவர் பேசியிருக்கிறார். இதில் தவறே இல்லை" என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதை நிராகரித்து விட்டாராம்.

    English summary
    deputy cm o panneerselvam's son theni mp op raveendranath kumar speech in usa
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X