For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஷாமியானா பந்தல் கூட போடாதது வேதனையிலும் வேதனை

கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஷாமியானா பந்தல் கூட போடாதது வேதனை அளிக்கிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஷாமியானா பந்தல் கூட போடாதது தொண்டர்களையும் மக்களையும் வேதனையடைய செய்துள்ளது.

கருணாநிதி நேற்று மாலை உடல்நல குறைவுகளால் காலமானார். அவரது உடல் இன்று காலை ராஜாஜி அரங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது கடைசி ஆசை மெரினாவில் அண்ணாவின் சமாதிக்கு பக்கத்தில் ஒரு இடம் வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன் பேரில் தமிழக அரசிடம் திமுக மனு அளித்தது. எனினும் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்று கைவிரித்ததோடு காந்தி மண்டபத்தில் ஒதுக்குவதாக தெரிவித்தது.

அண்ணா சமாதி

அண்ணா சமாதி

இதையடுத்து நீதிமன்றத்தை திமுக நாடியது. இதில் கருணாநிதிக்கு இடம் மெரினாவி ஒதுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று காலை முதல் அவசர அவசரமாக மெரினாவில் அண்ணா சமாதிக்கு பக்கத்தில் பள்ளம் தோண்டு பணிகள் நடைபெற்றது.

இல்லாதது வருத்தம்

இல்லாதது வருத்தம்

அவரது உடல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அண்ணா சமாதிக்கு பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு ஷாமியானா பந்தல் கூட இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது.

சேதமடைய வாய்ப்பு

சேதமடைய வாய்ப்பு

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒரு வேளை கனமழை பெய்யும் பட்சத்தில் நல்லடக்கம் நடைபெற்ற இடத்தில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற அரைக்குறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொண்டர்கள் வருத்தம்

தொண்டர்கள் வருத்தம்

அஞ்சலி செலுத்த வந்த முக்கியஸ்தர்களுக்கு போடப்பட்ட பந்தலை கருணாநிதிக்கு போட எத்தனை நாழிகை ஆகி விட போகிறது? போராடி பெற்ற இடம் சேதமடைந்தால் என்னவாவது என்ற கவலை அனைவர் மத்தியிலும் உள்ளது. மேலும் ஜெயலலிதாவை நல்லடக்கம் செய்த போது இயற்கை இடர்களில் இருந்து காக்க அவரை அடக்கம் செய்த இடத்தில் ஷாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
There is no shamiyana pandal for Karunanidhi's samadhi, if rain occurs the samadhi will get damage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X