For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேறு வழி இல்லை.. துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதான் என்கிறார் எச் ராஜா!

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதான் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது 5-க்கும் மேற்பட்டோர் பலி- வீடியோ

    தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதான் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போராட்டத்தை கலைக்க முயன்ற காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர்.

    துப்பாக்கிச்சூடு

    துப்பாக்கிச்சூடு

    இருப்பினும் போராட்டம் கட்டுக்கடங்காமல் போனது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சூறையாடப்பட்டது. போராட்டம் கைமீறியதை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    தமிழகம் முழுவதும் அதிர்ச்சி

    தமிழகம் முழுவதும் அதிர்ச்சி

    இதில் 5 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    எச் ராஜா கருத்து

    துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் சரிதான் என்கிற ரீதியில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

    எச் ராஜாவுக்கு கண்டனம்

    எச் ராஜாவுக்கு கண்டனம்

    அதாவது, போராட்டம் கலவரமாக மாறும் போது வேறு வழி இல்லை என தெரிவித்துள்ளார். எச் ராஜாவின் இந்த டிவிட்டர் பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    H Raja says the fire in Thoothukudi is right. He has twitted that there is no way when the protest coverts violence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X