For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தடுமாறும் ரேசன் கடை ஊழியர்கள்.. இலவச அரிசி பற்றாக்குறையால் தவிப்பு!

இலவச அரிசி போதுமான அளவு இருப்பு இல்லாததால் ரேசன் கடை ஊழியர்கள் தவிப்பில் உள்ளனர்.

By Kmk Esakkirajan
Google Oneindia Tamil News

நெல்லை: இலவச அரிசி போதுமான அளவு இருப்பு இல்லாததால் ரேசன் கடை ஊழியர்கள் தவிப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் 1 கோடிக்கும் மேல் ரேசன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளது. இந்த ரேசன் கார்டுகளுக்கு தமிழகத்தில் 34 ரேசன் கடைகள் மூலம் பொருட்கள் வினியோகம் நடந்து வருகிறது. தற்போது ஸ்மார்ட் ரேசன் கார்டு மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நாளுக்கு நாள் பொருட்களை விற்பனை பாதியாக குறைந்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

There In No Adequate Rice For Free Rice In Ration Shops At Nellai

ரேசன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.13.50க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது ரூ.25 என உயர்த்தப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு கட்சியினர் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். ஆனால் உணவு வழங்கல் துறை கண்டுகொள்ளவில்லை. இதில் உளுந்தம் பருப்பு, துவரம் பருப்புகளுக்கு கொள்முதல் டெண்டர் கோரப்படவில்லை. இதனால் இவற்றின் இருப்பும் தற்போது இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த காரணத்தால் ஒட்டு மொத்தமாக தமிழ்நாடு அரசு ரேசன் கடைகளை மூடப்போவதாகவே தெரிகிறது. தற்போது ரேசன் கடைகளில் அரிசி வினியோகம் குறைக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் பயத்தில் உள்ளனர். இதற்கு முன்னர் 20 கிலோ புழுங்கல் அரசி இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் புகார் கூறுகின்றனர். புழுங்கல் மற்றும் பச்சரிசியை பாதிக்கு பாதியாக வாங்கி செல்லுமாறு வற்புறுத்துவதாக புகார் கிளம்பியுள்ளது.

இதுகுறித்து ரேசன் வட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுவதாக உள்ளது. அதாவது தற்போது ரேசன் கடைகளில் புழுங்கல் அரிசி போதுமான இருப்பில் இல்லை என்று கூறுகின்றனர். பருவமழை இல்லாததால் அரிசி விளைச்சல் குறைந்து அரிசி வரத்து ரேசன் கடைகளுக்கு குறைந்து விட்டதாகவும் அதனால்தான் பாதிக்கு பாதியாக பச்சரிசியை வழங்குவதாக தெரிவிக்கின்றனர்.

English summary
There in no adequate rice for free rice in ration shops at Nellai district. Ration shop employees are worrying about this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X