For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபாவின் உயிருக்கு ஆபத்து.. நீக்கப்பட்ட டிரைவர் ராஜா கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!

தீபாவிற்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால் அவருக்கு பாதுகாப்பு அறனாக தன்னை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரைவர் ராஜா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ.தீபாவின் டிரைவர் ராஜா கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!- வீடியோ

    சென்னை: தீபாவிற்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால் அவருக்கு பாதுகாப்பு அறனாக தன்னை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரைவர் ராஜா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கினார். இதில் அவரது நண்பரும் கார் டிரைவருமான ராஜாவுக்கு முக்கிய பொறுப்பை வழங்கியிருந்தார்.

    இதனால் தீபா, அவரது கார் டிரைவர் ராஜா மற்றும் கணவர் மாதவனுக்கு இடையே பிரச்சினை எழுந்தது. மாதவனுக்கும் ராஜாவுக்கும் இடையிலான பிரச்சனை தொடர்ந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி ராஜாவை கட்சியிலிருந்து நீக்கினார் தீபா.

    தீபாவின் குடும்ப நண்பர்

    தீபாவின் குடும்ப நண்பர்

    இந்நிலையில் டிரைவர் ராஜா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் மாநில செயலாளராக இருந்து வரும் நான் தீபாவின் குடும்ப நண்பர் என்ற முறையில் அவருக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறேன்.

    தீபாவுக்கு எதிராக

    தீபாவுக்கு எதிராக

    கட்சியில் கிளை பதவி முதல் மாவட்ட செயலாளர்கள் பதவிகள் உட்பட அனைத்திற்கும் கடுமையான போட்டி நிலவி வந்தது. கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்த குறிப்பிட்ட சிலர் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் தூண்டுதலில் தீபாவுக்கு எதிராக செயல்பட்டு வந்தனர். அதன் காரணமாக அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

    மாதவன் கொலை மிரட்டல்

    மாதவன் கொலை மிரட்டல்

    இதன் காரணமாக தீபாவின் கணவரும் கட்சியில் உள்ள சிலரும் என் மீது கோபம் அடைந்தனர். அதன் விளைவாக சமூக வலைதளத்தில் என்னைப்பற்றி தவறான கருத்துகளை பதிவிட்டதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். பேரவை மற்றும் கழகத்தின் எந்த பணிகளையும் செய்ய விடாமல் தடுத்தனர்.

    தீபாவுக்கு பாதுகாப்பில்லை

    தீபாவுக்கு பாதுகாப்பில்லை

    மேலும் தீபாவிற்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால் எனக்கு பாதுகாப்பு வழங்கவும், தீபாவிற்கு பாதுகாப்பு அறனாக செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் டிரைவர் ராஜா தெரிவித்துள்ளார்.

    {document1}

    English summary
    Deepa's Driver Raja complaint to chennai Police commissioner. Raja says in his complaint there in no safety for deepa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X