For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவர் ஜெயந்தி... பசும்பொன்னில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

தேவர் ஜெயந்தி குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் தேவர் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: முத்துராமலிங்க தேவரின் 110-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில்
அமைந்துள்ள தேவர் சிலைக்கு முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.

அரசியல் தலைவர்கள், சமூதாய தலைவர்களின் வருகையை முன்னிட்டு பசும்பொன் கிராமத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி

சுதந்திரப் போராட்ட வீரரும், பார்வர்டு பிளாக் கட்சித் தலைவருமான முத்துராமலிங்கத் தேவர் 110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குரு பூஜை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அவரது சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் இருக்கும் தேவர் நினைவிடத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

பொங்கல் வைத்து வழிபாடு

பொங்கல் வைத்து வழிபாடு

கோவை காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமி ஆன்மிக விழாவை நேற்று தொடங்கி வைத்தார். பலரும் பால்குடம் எடுத்தும் பொங்கல் வைத்தும் தேவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

தேவர் ஜெயந்தி அரசு விழா

தேவர் ஜெயந்தி அரசு விழா

நேற்று அரசியல் விழா நடைபெற்றது. அக்டோபர் 30ஆம் தேதியான இன்று ஜெயந்தி, குரு பூஜை அரசு விழாவாக நடைபெறுகிறது. இதில் காலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

முதல்வர் அஞ்சலி

முதல்வர் அஞ்சலி

இன்றைய தினம் காலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார் காமராஜ், ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முதல்வர் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 8000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

தினகரன் அணியினர் எதிர்ப்பு

தினகரன் அணியினர் எதிர்ப்பு

அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்ற நிலையில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகைக்கு டிடிவி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக வந்த தகவலையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கும் வகையில்,வழக்கத்தைவிட அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு பணி

கண்காணிப்பு பணி

மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 8000க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். பசும்பொன்னில் மட்டும் 7 சிசிடிவி கேமிராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவி போலீசார் தீவிர பணியாற்றி வருகிறார்கள். தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.​

சீமான் மலர் அஞ்சலி

சீமான் மலர் அஞ்சலி

சென்னை, நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். காலை 11 மணிக்கு பெரம்பூர், பக்தவச்சலம் காலணி, முதல் தெருவில் (பி.வி.காலனி ரவுண்டானா அருகில்) உள்ள முத்துராமலிங்கத்தேவரின் திருவுருவச்சிலைக்கும் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வார் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

மதுரையில் தேவர் சிலைக்கு அஞ்சலி

மதுரையில் தேவர் சிலைக்கு அஞ்சலி

பசும்பொன் செல்லும் முன்பாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏராளமானோர் பால்குடம் எடுத்து தேவருக்கு மரியதை செலுத்தினர்

English summary
TamilNadu chief Minister and deputy chief Minister to pays homage to freedom fighter Pasumpon Muthuramalinga Thevar on the occasion of his 110th birth anniversary and 55th Guru Pujai on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X